உடுமலை ஆசிரியருக்கு தேசிய நல்லாசிரியர் விருது
உடுமலை ஆசிரியருக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து பலரும் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
டாக்டர்.சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி நாட்டில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான ஆசிரியர் தினம் இன்னும் சில தினங்களில் கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்று மத்திய கல்வி அமைச்சகம் தேசிய ஆசிரியர் விருது பட்டியலை வெளியிட்டுள்ளது.அதன்படி நாடு முழுவதும் 45 ஆசிரியர்களுக்கு தேசிய ஆசிரியர் விருது மத்திய கல்வி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களும் இடம் பெற்றுள்ளனர். சென்னை மயிலாப்பூரில் சேர்ந்த பி.எஸ் சீனியர் செகண்டரி என்ற தனியார் பள்ளியின் ஆசிரியர் ரேவதி பரமேஸ்வரன் மற்றும் திருப்பூரில் உள்ள பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் விஜயலட்சுமி உள்ளிட்ட இருவருக்கு தேசிய ஆசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தேசிய ஆசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 5ம் தேதி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய ஆசிரியர் விருதை வழங்கி கௌரவிக்க உள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் உள்ள பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் விஜயலட்சுமி என்வருக்கு தேசிய நல்லாசிரியர் விருது தற்பொழுது மத்திய அரசால் அறிவிக்கப்ப பட்ட நிலையில் மாணவிகள் இனிப்புகள் வழங்கியும் ஆசிரியர்கள் பொன்னாடை போர்த்தியும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்
பின்னர் விஜயலட்சுமி செய்தியாளர்களும் கூறும் பொழுது..
கடந்த 1998-ம் ஆண்டு வால்பாறையில் உள்ள முடீஸ் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியை தொடங்கினேன்.அதைத் தொடர்ந்து கடந்த 2011 -ம் ஆண்டு பதவி உயர்வு பெற்று உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி புவியியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றேன்.எனது பணியை பாராட்டி கடந்த 2020-ம்
ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டதன் பலனாக தேசிய நல்லாசிரியர் விருது எனக்கு கிடைத்துள்ளது.இந்த விருதை நான் பணியாற்றி வருகின்ற பள்ளிக்கும், மாணவிகளுக்கும், பெற்றோருக்கும் சமர்ப்பிக்கின்றேன்.மேலும் விருதுக்கு பரிந்துரை செய்த தமிழக முதலமைச்சர்,பள்ளி கல்வித்துறை அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்,மாவட்ட நிர்வாகத்திற்கும் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.
.jpeg)