கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற வாகனம் பறிமுதல் - இரண்டு பேர் கைது.!

 

கோவில்பட்டி மெயின் ரோட்டில் கிருஷ்ணன் கோவில் அருகே போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தபோது போலீசாரை பார்த்ததும் நிற்காமல் ஒரு மினி லோடு ஆட்டோ அதிவேகமாக சென்றள்ளது. இதனை பார்த்த போக்குவரத்து காவலர் அருண் விக்னேஷ் , அந்த மினி லோடு ஆட்டோவை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து பார்த்த போது அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்திக் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது.

இதையெடுத்து அவர் அந்த வாகனம் மற்றும் வாகனத்தில் வந்தவர்களை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். 

போலீசார் விசாரணை நடத்தியதில் உக்கிரன் கோட்டையைச் சேர்ந்த முத்துக்குமார் (28), மானூர் மாவடியை சேர்ந்த மகாராஜா (36) என்பதும், 45 கிலோ எடை கொண்ட 22 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி