தூத்துக்குடியில் 1 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் கைது.!

 

தூத்துக்குடியில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கபீர்தாசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் ரோச் பூங்கா அருகே ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது அங்குள்ள உப்பளப் பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர்கள் விற்பனைக்காக ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக மாப்பிள்ளையூரணி, வெற்றிவேல்நகர் கார்த்திக் (வயது 30), எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த மகாவருண்குமார்(18), மட்டக்கடையைச் சேர்ந்த விஷால்(18), புதுக்கோட்டை யாதவர் தெருவைச் சேர்ந்த தீபக்(19) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர். 

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி