கோவில்பட்டி: ரகசிய வீடியோக்களை வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் கேட்டு சப் இன்ஸ்பெக்டரை மிரட்டிய பெண் போலீஸ்.!

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்  சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் செல்வகுமார். இவருடன் பணியாற்றிய பெண் போலீசான இந்திரா காந்தி என்பவருக்கும் இவருக்கும் நெடுநாட்களாக நெருக்கமான பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், தன்னிடமுள்ள ரகசிய வீடியோ மற்றும்  ஆடியோக்களை வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் கேட்டு பெண் போலீஸ் இந்திரா காந்தி எஸ்.ஐ. செல்வகுமாரை தொடர்ந்து மிரட்டியுள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த இவர் இது தொடர்பாக தனது மனைவியிடம் நடந்ததை கூறியுள்ளார். இதனையடுத்து எஸ்.ஐ.யின் மனைவி அளித்த புகாரின் பேரில் பெண் போலீஸ் இந்திரா காந்தி, மற்றும் அவருடன் கூட்டு சதியில் ஈடுபட்ட 5 பேர் மீது கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இது குறித்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி