கொலை, கொலை முயற்சி வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம்.!

 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி வழக்கில் கைதான 3பேர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 06.10.2025 அன்று குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நாசரேத் வெள்ளரிக்காயூரணி பகுதியைச் சேர்ந்த அம்மாமுத்து மகன் மூர்த்திராஜா (27) மற்றும் குலசேகரன்பட்டினம் காமராஜர் நகரைச் சேர்ந்த செல்லத்துரை மகன் முத்துச்செல்வன் (27) என்பவரையும் 

ஆறுமுகநேரி காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட திருச்செந்தூர் தலைவன்வடலி பகுதியைச் சேர்ந்த வேல்சாமி மகன் சூர்யா (23) ஆகிய 3 பேரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் கே. இளம்பகவத் உத்தரவின் பேரில் இன்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த ஆண்டு கடந்த 10 மாதங்களில் மட்டும் 115 பேர் குன்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி