காதல் தோல்வி:வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்.!
தூத்துக்குடி முத்தையாபுரம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் மாரிமுத்து (24), தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த ஒரு மாத காலமாக தனது உறவுக்கார பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்களாம்.
இதனால் மன வேதனை அடைந்த மாரிமுத்து நேற்று இரவு தனது படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று மதியம் வரை அவர் கதவையைத் திறந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது அண்ணன் கதவு உள்பக்கமாக பூட்டிஇருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து ஜன்னல் வழியாக பார்த்த போது மாரிமுத்து வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இது குறித்து முத்தையாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இன்ஸ்பெக்டர் ஜீவமணி, தர்மராஜ் சப் இன்ஸ்பெக்டர் முகிலரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
