"தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் மகமை சங்க செயலாளர் விநாயக மூர்த்திக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருப்பதால் பழிவாங்கும் நோக்கில் ஆசிரியர்கள் மூலம் பொய் குற்றச்சாட்டு சுமத்துகிறார்கள்" - பள்ளி செயலாளர் வழக்கறிஞர் எம். ஜி. எம். ரமேஷ் பேட்டி.!

தூத்துக்குடி காரப்பேட்டை  நாடார் மகமை சங்க செயலாளர் விநாயக மூர்த்திக்கு எதிராக தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்று தான் வழக்கு தொடர்ந்திருப்பதால் தன்மீது பழிவாங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆசிரியர்கள் மூலம் பொய் குற்றச்சாட்டுகள் சுமத்துகிறார்கள் ஆசிரியர்களிடம் எந்தவித பணமும் பெறவில்லை என காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளரும் வழக்கறிஞர்  எம் ஜி எம் ரமேஷ் பேட்டியளித்தார்.

தூத்துக்குடியில் உள்ள காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று பள்ளிச் செயலாளர் ரமேஷ் மீது குற்றச்சாட்டு தெரிவித்து அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து பள்ளி செயலாளர் வழக்கறிஞர் எம் ஜி எம் ரமேஷ் தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்

"தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 4/8/202 முதல் பள்ளி செயலாளராக செயல்பட்டு வருகிறேன். செயலாளராக பொறுப்பேற்ற உடன் பள்ளியில் நடைபெற்ற சீர்கேடுகள் காரணமாக மாணவர்களுடைய தேர்ச்சி சதவீதம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் குறைந்து 70 சதவீதமாக இருந்தது. இதை சீர் செய்ய பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு சில அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன பல்வேறு திறன் பயிற்சிகள் மற்றும் சிறப்பு வகுப்புகள் ஆகியவை நடத்தப்பட்டு தற்போது 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் 99 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது. 

மேலும் பள்ளியின் மைதானம் மற்றும் சோதனை கூடங்கள் ஆகியவை சீரமைக்கப்பட்டு மாணவர்கள் பயன்பெறும் வகையில் செய்யப்பட்டது. மேலும் பள்ளியில் மதிய உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் நிதியுடன் சேர்த்து ஆயிரம் ரூபாய் தினமும் செலவு செய்து ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டன. இவ்வாறு மாணவர்களின் நலன் சார்ந்தே அனைத்து பணிகளும் நடைபெற்றது. 

இந்த நிலையில் ஆசிரியர்கள் ஆசிரியர் பணி இல்லாமல் பள்ளி வேலைகளில் ஆன்லைன் டிரேடிங் மூலம் பணத்தை இழக்கும் செயலும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருவது தெரிய வந்ததை தொடர்ந்து, பள்ளி வேலைகளில் ஆசிரியர்கள் தங்கள் செல்போனை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்துவிட்டு முக்கிய அழைப்புகள் ஏதேனும் வந்தால் பள்ளி தொலைபேசிக்கு போன் செய்து அவர்களிடம் கொடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். மேலும் மாணவர்கள் வருவதற்கு முன்பாக ஆசிரியர்கள் பள்ளியில் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்ய பயோமெட்ரிக் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.  இதன் காரணமாக ஆசிரியர்களுக்கு என் மேல் அதிருப்தி ஏற்பட்டது.

மேலும் கடந்த நிர்வாகத்தினர் இருக்கும்போது ஆசிரியர்கள் பணி நியமனத்தின் போது பணம் பெற்றுக் கொண்டு நியமனம் செய்யப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் மாணவர்களின் தேர்வு விடைத்தாள்களை திருத்தும் போது ஆசிரியர்கள் முறையாக திருத்தாமல் தவறான கேள்விகளுக்கு மார்க்க அளித்த ஆசிரியர்களுக்கு பணப்பலன்கள் நிறுத்தப்பட்டது. 

மேலும் டெத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் முறையாக பணி செய்யாத ஆசிரியரை பணி நிறுத்தம் செய்தேன். இவை அனைத்தும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு செய்யப்பட்டது. மேலும் நீக்கப்பட்ட ஆசிரியர் காரப்பேட்டை நாடார் மகமை செயலாளர் விநாயகமூர்த்திக்கு உறவினர் என்பதன் காரணமாக ஆசிரியர்களுக்கும் எனக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

மேலும் காரப்பேட்டை நாடார் மகமை கடந்த 15 ஆண்டுகளாக பதிவுத்துறையில் முறையாக பதிவு செய்யாமல் உள்ளதை சுட்டிக்காட்டி பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க கூறினேன், இதன் காரணமாக நிர்வாகத்தில் உள்ளவர்கள் இடையே கருத்து வேறுபாடு உருவானது. மேலும் இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளது. மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக காரப்பேட்டை நாடார் மகமை செயலாளர் விநாயகமூர்த்தி புதிதாக எந்தவித உறுப்பினர்களையும் உறுப்பினர்களாக சேர்க்கவில்லை இதன் காரணமாக தனிப்பட்ட விரோதம் ஏற்பட்டது.

தற்போது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அதை மறைத்து தேர்தலை நடத்த முயற்சி செய்கின்றனர். எனவே பதிவுத்துறையில் அங்கீகாரம் செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு முறையாக தேர்தலை நடத்த வேண்டும் என பலமுறை எடுத்து கூறி வருகிறேன்.

இந்நிலையில் கடந்த 2/8/22 எனது பதவி காலம் முடிந்த நிலையில் புதிதாக தேர்தல் நடைபெற்று புதிய நிர்வாகிகள் பதவியேற்கும் வரை அவர்களிடம் கணக்கு வழக்குகளை ஒப்படைக்கும் வரை பழைய நிர்வாகிகள் செயல்படுவார்கள் என்பது விதி அதன் அடிப்படையில் நான் செயல்பட்டு வருகிறேன்.

மேலும் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக என்னை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற அடிப்படையில் காரப்பேட்டை நாடார் மகமை செயலாளர் விநாயகமூர்த்தி உள்ளிட்டோர் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் காரப்பேட்டை நாடார் மேல்நிலைப் பள்ளியில் சிசிடிவி கேமராக்கள் செயல்படாத காரணத்தினால் சிசிடிவி கேமராவை சரி செய்ய பணியாளர்கள் சென்றுள்ளனர். அப்போது அவர்களிடம் ஆசிரியர்கள் தங்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா மூலம் ஈடுபடுகிறார்கள் என கூறி பாஸ்வேர்டை மாற்றி ஏற்கனவே இருந்ததை அழித்து விட்டார்கள். இதைத்தொடர்ந்து பள்ளிக்கு சென்ற நான் ஆசிரியர்களுக்கும் நமக்கும் உள்ள பிரச்சினை நீதிமன்றம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் உள்ளது அதுவரை உங்களுக்கு பள்ளி செயலாளர் நான்தான் எனக் கூறினேன், ஆனால் ஆசிரியர்கள் வீண் குற்றச்சாட்டுகளை தெரிவிக்கிறார்கள்.

நான் இந்த பதவியில் நீடிக்க கூடாது என மகமை செயலாளர் விநாயகமூர்த்தி உதவி தலைவர் மகேந்திரன் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். மேலும் கல்வித்துறைக்கு முறைகேடாக கடிதங்கள் அளித்துள்ளனர்.

பள்ளியில் மாணவர்களின் நலனுக்காக தான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தேன் முறைகேடாக எதையும் செய்யவில்லை. மேலும் காரப்பேட்டை நாடார் மகமையில் உள்ள பல்வேறு நிர்வாக சீர்கேடுகளை சுட்டிக்காட்டி முறையாக தேர்தல் நடத்த கோரிக்கை விடுத்ததன் காரணமாக இவ்வாறு பொய் குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். 

காரப்பேட்டை நாடார் மகமை செயலாளர் விநாயக மூர்த்திக்கு எதிராக தான் செயல்பட்டு வருவதால் என்னை குறுக்கு வழியில் அகற்ற ஆசிரியர்களை தூண்டிவிட்டு பள்ளியின் நலனுக்கு எதிராகவும் மாணவர்களின் நலனுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறார்.

ஆசிரியர்கள் பண பலன்கள் பெறுவது தொடர்பாக முறையான தகவல் வந்திருந்தால் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும்.

காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களிடம் எந்தவித கையூட்டோ பணமும் பெறவில்லை மோசடியாக குற்றம் சாட்டுகிறார்கள்" என அவர் தெரிவித்தார்.

முன்னதாக நேற்று  எங்கள் பள்ளியின்முன்னாள் ரமேஷ் என்பார் அத்துமீறி நுழைந்து பள்ளிச் செயலர் M.G.M. ஆசிரியர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றார். இவர் 26.10.2025 அன்று நடைபெற்ற காரப்பேட்டை மகமை பொதுக்குழுக் கூட்டத்தில் இவருடைய தவறான மற்றும் சரியில்லாத நடவடிக்கை காரணத்தின் அடிப்படையில் தீர்மானம் கொண்டு வந்து அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கப்பட்டவர் ஆவார். அந்த தீர்மானத்தில் 165 மகமை உறுப்பினர்கள் கையொப்பம் இட்டுள்ளனர்.

ஆனால் அவர் இன்று (30.10.2025) மதியம் எங்கள் பள்ளிக்கு M.S.S. சுரேஷ் மற்றும் அடியாட்களை அழைத்து வந்து ஆசிரியர்களை மிரட்டினார். இவர் செயலர் பதவியில் இருக்கும் காலத்தில் ஆசிரியர்களை சாக்கடைத் தண்ணீரை மைதானத்தில் பைப் மூலம் கொடுமையான வெயிலில் தெளிக்க அதிகாரத் தோரணையில் மிரட்டி அந்த வேலையைச் செய்ய வைத்தார்.

மேலும் அவர், ஆசிரியர்கள் தங்கள் மனைவிகளிடம் பேசுவதற்குக் கூட என்னிடம் கேட்காமல் பேச மாட்டார்கள்" என்றும் ஆணவத்தில் கூறினார். தற்போது பதவி ஆசையில் ஆசிரியர்களை கொலை மிரட்டல் செய்கிறார். எனவே ஆசிரியர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. எனவே, தமிழக அரசு மற்றும் கல்வித்துறை இந்த விசயத்தில் ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு மற்றும் உயிர்ப் பாதுகாப்பு தருமாறு வேண்டுகின்றோம் என கூறி பள்ளியில் பணியாற்றும் அரசு உதவிபெறும் 42 ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி