துணை முதல்வருக்கு பிறந்தநாள் பரிசு: இளைஞரணி சார்பாக ஜோயலின் பாடல் வரியில் ‘‘வரலாறு படைக்க இளம் தலைவர் வருகிறார்’’ - மூன்றாம் படைப்பு வெளியீடு.

2021 தேர்தலில் "ஸ்டாலின் தான் வர்றாரு" என்ற பாடல், பொதுமக்களிடையே எழுச்சியை பெற்றது. இதனை தொடர்ந்து ‘‘வரலாறு படைக்க இளம் தலைவர் வருகிறார்’’ என்ற புரட்சி பாடல் வருகின்ற 2026 தேர்தலில் தொண்டர்களை உச்சாகபடுத்த காத்திருக்கிறது என்கின்றனர் திமுக இளைஞரணியினர். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தமிழ்நாடு துணை முதலமைச்சரும் தி.மு.க இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தி.மு.க இளைஞரணி மாநில துணை செயலாளர் எஸ்.ஜோயல் பாடல் வரிகளில் ‘‘வரலாறு படைக்க இளம் தலைவர் வருகிறார்’’ என்ற பாடல் வெளியீட்டு விழா நேற்று 25ம்தேதி நடைபெற்றது.

இந்த விழாவில், ‘வரலாறு படைக்க இளம் தலைவர் வருகிறார்’ என்ற பாடலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். மாநில இளைஞரணி துணை செயலாளர்கள் அதை பெற்றுக்கொண்டனர்.

தி.மு.க. இணைஞரணிச் செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் நவம்பர் 27ம் தேதி! ஆனால், நவம்பர் 25ம் தேதியே தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள், தொண்டர்கள் என அறிவாலயத்தில் அனைவரும் எழுச்சியுடன் காணப்பட்டனர். கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உதயநிதியின் பிறந்தநாளை இன்றைக்கே கொண்டாடும் அளவுக்கு இளைஞரணியினர் பிரமாண்டமாக  ஏற்பாடு செய்திருந்தனர்.

காரணம், தி.மு.க. மாநில இணைஞரணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல், உதயநிதியின் பிறந்நாளையொட்டி ‘‘வரலாறு படைக்க இளம் தலைவர் வருகிறார்’’ என்ற பாடல் வரிகளை எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு மாரிசக்தி இசையமைத்து இருக்கிறார். பிரபல தமிழ் திரைப்பட பின்னனி பாடகர் மனோ பாடியிருக்கிறார். இந்தப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சக்குத்தான் தி.மு.க. இளைஞரணியினர் அறிவாலயத்தை நோக்கி படையெடுத்துள்ளனர்.  இந்த பாடலுக்கான, ஜோயலின்  பாடல் வரிகள் துணை முதல்வர் உதயநிதியை வியக்க வைத்ததோடு, தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளை உற்சாகத்துடன் எழுச்சியுறவும் செய்திருக்கிறது என்று சொன்னால் அது மிகை ஆகாது. 

ஏற்கனவே, ஜோயல் எழுதிய பாடல் வரியில் "உதயநிதி ஸ்டாலின் எங்கள் அண்ணா" என்ற பாடல் 2023ல் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் இளைஞரணி சார்பாக வெளியிட்டனர். இதனை தொடர்ந்து 2024லும்  உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் ஜோயலின் பாடல் வரியில் "தலைவனே இளம் தலைவனே அண்ணனே எங்கள் அண்ணனே" என்ற பாடலை இளைஞரணியினர் வெளியிட்டனர்,

தற்போதைய 2025லும் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு

"வருகிறார்

அண்ணன் வருகிறார்!

உதயநிதி ஸ்டாலின் வருகிறார்!" என்ற ஜோயலின் வரியில் உறுவான புரட்சிகரமான பாடலை நேற்று முன் தினம் அறிவாலய கலைஞர் அரங்கில் வைத்து இப்பாடல்  வெளியிட்டு விழா வெகு சிறப்புடன் இளைஞரணியினரின்  கோஷங்களுடன் கோலகாலமான கொண்டாட்டத்திற்கு பின் வெளியிடப்பட்டுள்ளது. 

பிறந்தநாள் பாடலை வெளியிட்டு, வாழ்த்துரை வழங்கிய அமைச்சர் அன்பில் பொய்யாமொழி மகேஷ் பேசியதாவது...

இளைஞரணி எனும் தங்க சுரங்கத்தை தோண்ட தோண்ட தங்கக் கட்டிகளாக கிடைக்கிறது, என் தம்பிமார்கள்  மாபெறும் சிங்க குட்டிகளாகவும் இருக்கிறார்கள். வருகின்ற 5 மாதங்களுக்குள் இந்த சிங்கக்குட்டிகள் வேட்டையாடவும் காத்திருக்கிறார்கள். வேட்டையாடுவது என்பது மனித வேட்டையல்ல, வாக்கு வேட்டை. 27ம் தேதி முதல் நமது துணை முதல்வரின் பிறந்த நாளை கொண்டாடி மகிழ நாம் எல்லாம் காத்திருக்கும் போது,  திமுக இளைஞரணி சார்பாக முந்திக் கொண்டு 25ம் தேதியே கொண்டாடி மகிழ்கிறார்கள் என்றால் அது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. அதுவும் அறிவாலயத்தில் இளம் தலைவரின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது என்பது எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை தருகிறது என்றார்.  

தனித்திறமையை வளர்த்துக் கொள்ளும் இளைஞரணியினரை கட்சி பயன்படுத்திக் கொள்ளும். ஆகவே நீங்கள் சீறிப்பாயும் ஜல்லிக்கட்டு  காளையாக இருக்க போகிறீர்களா? மழையில் முளைத்த காளானாக இருக்க போகிறீர்களா? என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று இளைஞரணியினரை  கேட்டுக் கொண்டார்.

மேலும் கூறியதாவது,

ஏ.கே 47 ஐ போன்று நமது எம்.கே 24, எம்.கே.எஸ். 53 இருக்கிறது. இப்போது புதிதாக எம்.கே‌. யு.எஸ். 77 எனும் மிகப்பெரிய ஆயுதம் வந்துள்ளது. இது வெறுமனே குண்டுகளால் தாக்குவதல்ல, கருத்துக்களால் அவர்களை தாக்கப்போகிறோம். எந்தெந்த மேடைக்கு எந்தெந்த கருத்துக்களை பயன்படுத்த வேண்டும் என்பதை முழுமையாக அறிந்தவர்கள் நாம். ஆகவே திமுக மீண்டும்  7வது முறையாக ஆட்சியமைக்க நாம் அணைவரும் ஒன்றிணைந்து உறுதியேற்க வேண்டும் எனவும் இளைஞரணியினரை கேட்டுக் கொண்டார்.

வைரலாகும் ஜோயலின் பாடல் வரிகள்

‘‘இளைஞர் அணி பட்டாளத்தின் எழுச்சிக்கு நடுவே உதயமானது! ஈடு இணையற்ற இளம் தலைவரின் பிறந்தநாள் பாடல்..!’’ என தூத்துக்குடி எஸ்.ஜோயல் தனது வலைதளப் பக்கத்திலும் பதிவிட்டிருக்கிறார். ‘வரலாறு படைக்க இளம் தலைவர் வருகிறார்…’’ என்ற பாடல் வரிகள்தான் தி.மு.க. இளைஞரணியினரை வெகுவாக கவர்ந்ததோடு, இந்தப் பாடல் தான் வலைதளங்களிலும் வைரலாகப் பரவி வருகிறது. தற்போதைய அரசியல் களத்தில்  ‘வரலாறு படைக்க இளம் தலைவர் வருகிறார்…’’ எனும் பாடல் வரிகள் திமுகவினரை மட்டும் அல்ல பொதுமக்களையும் கேட்க தூண்டுவதாக திமுக இளைஞரணியினர் மத்தியில் பேசப்படுகிறது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!