தூத்துக்குடி நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் 383 வழக்குகளுக்கு தீர்ப்பு.!

 

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டில் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் 383 வழக்குகளுக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டில் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் 383 வழக்குகளுக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.1 கோடியே 18 இலட்சத்து 89 ஆயிரத்து 478 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டில் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் 383 வழக்குகளுக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கவும், புகார்களுக்கு தீர்வு காணவும் நுகர்வோர் குறைதீர் ஆணையம் செயல்பட்டு வருகின்றது. 

இந்த ஆணையம் ஒரு சிவில் கோர்ட்டுக்கு இணையான அதிகாரங்களைக் கொண்டுள்ளது. பொருளிலுள்ள குறைபாடுகளை நீக்குதல், குறைபாடுடைய பொருள்களுக்கு பதிலாக புதிய பொருள்களை வழங்க உத்திரவிடுதல், நுகர்வோர் செலுத்திய தொகையை வட்டியுடன் திருப்பி அளிக்க உத்திரவிடுதல், உளைச்சல் மற்றும் அலைச்சலுக்குரிய இழப்பீடு வழங்க உத்திரவிடுதல் போன்றவை இந்த ஆணையத்தின் முக்கிய அதிகாரங்களாகும். 

தூத்துக்குடி மாவட்டத்தில் நுகர்வோர் குறைதீர் ஆணையமானது தூத்துக்குடியிலுள்ள டுவிபுரம் 2வது தெருவில் செயல்பட்டு வருகிறது. இன்சூரன்ஸ் நிறுவனங்களில் காப்பீடு தொகை கிடைக்காதது, வாங்கிய பொருள்களில் குறைபாடு, மருத்துவமனைகளில் தவறான சிகிச்சை, போலி விளம்பரங்களின் மூலம் தவறான முறையில் விற்பனை போன்றவற்றிற்கு நீதி தேடி நுகர்வோர் புகார் மனுக்களை தினமும் தாக்கல் செய்கிறார்கள். புகார் மனு தாக்கல் செய்யப்பட்டு 58 நாட்களில் தீர்ப்பு அளிக்கப்பட்டது குறிப்படத்தக்க அம்சமாகும்.

இந்த புகார் மனுக்கள் மீது நுகர்வோர் குறைதீர் ஆணைய மாவட்ட தலைவர் S.J சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம், முத்துலெட்சுமி ஆகியோர் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கி வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் நடப்பாண்டில் இது வரை 383 வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கின்றது. 

அந்த வகையில் இந்த ஆண்டு அதிகபட்சமாக பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு ரூபாய் 1 கோடியே 18 இலட்சத்து 89 ஆயிரத்து 478 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட நுகர்வோர் தங்களக்கு ஏற்படும் சேவை குறைபாடு மற்றும் பாதிப்புகளுக்கு நீதி பெற தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி