ஒடிசா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு லாரியில் கடத்திவரப்பட்ட 75 கிலோ கஞ்சா பறிமுதல்- இருவரை கைது செய்து போலீசார் விசாரணை.

ஒடிசா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு லாரியில் கஞ்சா கடத்தி வருவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆந்திர தமிழக எல்லையில் உள்ள பரதராமி சோதனை சாவடியில் வேலூர் மாவட்டம் குடியாத்தம்,போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது சரக்கு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்த பொழுது அதில் 75 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது

இதனையடுத்து 75 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் (35)மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேசன் (44) ஆகிய இருவரையும் கைது செய்தனர் 

மேலும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் ஒரிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்வது தெரியவந்தது இதனையடுத்து இருவரையும் கைது செய்த பரதராமி போலீசார் மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி