"தவெக நிர்வாகி அஜிதாவிடம் விஜய் பேசி இருக்கலாம்.. அதை செய்யாதவர் எப்படி தலைவனாக இருக்க முடியும்?" _ தூத்துக்குடியில் பாஜக நிர்வாகி சரத்குமார் பரபரப்பு பேட்டி.

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திரைப்பட நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது,

தென்காசி தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, தேர்தல் அறிவிக்கப்பட்டு மாநில நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து எத்தனை இடத்தில் பாஜக வேட்பாளர்கள் நிறுத்தப் போகிறோம் என்று தெரிந்த பின்பு முடிவெடுக்கப்படும். மேலும், நான் நிற்பதை விட என்னுடன் பயணித்தவர்கள் நின்றால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கின்றேன் என்று தெரிவித்த போது, நடிகர் விஜயின் தவெக பற்றி கேள்வி எழுப்பப்பட்டது..

தவெக வை நான் அரசியல் கட்சியாக பார்க்கவில்லை

தேர்தலையே சந்திக்காத விஜய் தற்போது தேர்தலை சந்திக்க உள்ளார். முதலில் போட்டி போட வேண்டும் என்ன நிலைப்பாடு, கொள்கை, கோட்பாடு என்பதை தெரிவிக்காமல் தனி நபர் தாக்குதலை மட்டும் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்.. அரசியல் கட்சியாக நான் தவெக வை  பார்க்கவில்லை. தேர்தலை சந்தித்தப் பின்பு தான் தவெக வின் நிலைப்பாடு தெரிய வரும். அதன்பின்பு கட்சி இருக்குமா? இல்லையா? என்றும் தெரிய வரும்.

தவெக பெண் நிர்வாகி அஜிதாவுக்காக குரல் கொடுத்த சரத்குமார்

தூத்துக்குடியில் தவெக நிர்வாகி அஜிதா ஆக்னலுக்கு பொறுப்பு வழங்காததால் விஜய் கார் முன்னாள் நின்று நீதி கேட்டுள்ளார். அவரை ஒரு பெண்ணாக, மனிதாபிமானம் அடிப்படையில் விஜய் காரை விட்டு இறங்கி என்ன குறை என்று கேட்டிருக்கலாம். அதுதான் கதாநாயகன், அவர் தான் தலைவனாகவும் இருக்க முடியும். ஆனால் அவர் அதனை அன்று செய்யாமல் இருந்ததால் தர்ணா போராட்டம், மற்றும் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்க்கும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது.  அன்று அவர் இறங்கி இரண்டு வார்த்தைகள் என்ன என்று கேட்டிருந்தால் இந்த பிரச்னையை நடந்திருக்காது என்று பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தார் சரத்குமார்.

தவெக நிர்வாகி அஜிதா, திமுக பினாமியா? திட்டமிட்டு வெளியிடும் பரப்புரையா?

தூத்துக்குடி தவெக பெண் நிர்வாகி அஜிதாவுக்கு உள்கட்சிக்குள்  நடந்த கொடூர சம்பவம் இன்று சமூகவலைதளங்களில் வைரலாகி, அது பேசும் பொருளாகவும் மாறிவருகிறது. இதில் தவெக தொடங்கிய காலம் முதல் நேற்றைய பனையூர் சம்பவம் வரையில் தவெகவின் வளர்ச்சிக்காக உழைத்த ஓர் பெண் நிர்வாகி அஜிதா. இப்பகுதியில் அஜிதா உள்ப்பட தவெகவுக்குள் பல கோஷ்டி பூசல்கள் இருந்தாலும் ஆளும் கட்சிக்கும் ஆண்ட கட்சிக்கும் தேர்தல் பயத்தை உருவாக்கியவர் என்று சொன்னால் அது அஜிதா மட்டுமே என்று பொதுமக்கள்  பலராலும் புகழப்பட்டு வருகிறது. அஜிதாவின் பனையூர் போராட்டத்திற்கு பிறகு தவெக வால் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளரின் ஆதரவாளர்கள் *"அஜிதா வை திமுகவின் கை கூலி"* என்று பகிரங்கமாக விமர்ச்சனம் செய்ய தொடங்கினார்கள். திட்டமிட்டு இது சாதிய ரீதியாக பரப்புரையும் செய்யப்பட்டது‌. 

அஜிதாவின் தற்கொலை முயற்சி ஏன்? எதற்காக?

இந்த பொய் பரப்புரைகளை ஏற்றுக் கொள்ள முடியாமலும், தனக்கு நடந்த ஏமாற்றத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாமலும் மன வேதனையில் சிக்கித்தவித்த வேளையில், இறுதியில் இவர் *"தற்கொலை முயற்சிக்கு"* சென்றதாகவும் தகவல் வெளியானது. தூத்துக்குடி AVM மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அஜிதா வை தவெக தலைமை கழக நிர்வாகிகள் யாரும் தொடர்பு கொண்டு  இதுவரையில் நலம் விசாரிக்கவில்லை என்பதால் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. அஜிதாவை நலம் விசாரிக்க வேண்டியவர்கள் ஆடியோ லாஞ்ச் வெளியீட்டு விழாவுக்கு புறப்பட்டனர்

இதுபோன்று தவெக வினர் யாரும் தவறான முடிவுக்கு போகக்கூடாது என்று கண்டிக்க கூடிய தலைவர் விஜய் உள்ப்பட தவெக முக்கிய நிர்வாகிகள் அனைவரும் விஜய் நடிப்பில் வெளிவரக் கூடிய புதிய படத்தின்  ஆடியோ லாஞ்ச் வெளியீட்டு விழாவுக்காக சென்றது அஜிதா தலைமையில்  தவெகவுக்காக உழைத்த  ஒரு தரப்பினருக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளது.

தவெக வில் நடந்தேறிய இதே சம்பவம் - திமுகவில் நடந்திருந்தால்?

அஜிதாவுக்கு நடந்தேறிய இந்த பரிதாப நிலைக்கு பாஜக பிரமுகர் சரத்குமாரை தவிர வேறு அரசியல் கட்சியினரோ, சமூக ஆர்வலர்களோ, மகளிர் அமைப்புகளோ, மீனவ சங்கங்களோ குரல் கொடுக்க முன் வராதது ஏன்? என்ற கேள்வியை அஜிதா குடும்பத்தினர் முன் வைக்கின்றனர். மேலும் இதே சம்பவம் திமுகவில் நடந்தேறி இருந்தால், *"பெண்ணுரிமை காவலர்கள் எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை, சீமான், அன்புமனி, பிரேமலதா, ஹெச்.ராஜா"* என்று ஒரு பெரும் அரசியல் பட்டாளமே மு.க. ஸ்டாலினை எதிர்த்து ஒப்பாரி வச்சிருக்கும். ஏனா? அது அரசியல் லாபத்தை தேடித்தரும், ஓட்டு வங்கியை பெருக்கி காட்டும். இப்ப அஜிதா சம்பவத்தை முதன்மைபடுத்தி தவெகவை கண்டிப்பதால் யாருக்கும் எந்த அரசியல் லாபமும் கிடைக்காது என்பதற்காகவே பெண்ணுரிமை காவலர்கள்  மவுனம் காக்கின்றனர்‌. 

காவல்துறை வழக்கு பதிவு செய்து சட்ட  நடவடிக்கை எடுக்குமா?

 ஒரு பெண்ணுக்கு நடந்து வரும் அரசியல் சாராத விமர்ச்சனங்களுக்கும், அஜிதாவை தற்கொலை முயற்சிக்கு தூண்டும் விதமாக நடந்து கொண்டவர்கள் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் அஜிதா ஆதரவாளர்கள் மத்தியில் கோரிக்கையாக ஒலிக்கிறது. 

நடவடிக்கை எடுக்குமா? காவல்துறை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்கின்றனர் அஜிதாவின் குடும்பத்தினர்‌.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி