பல்திறன் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்.!
தூத்துக்குடி மாவட்டத்தில் "களமாடு பல்திறன் போட்டிகளில்” வெற்றி பெற்ற மாணவ - மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடங்கள் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் சார்பில், மாவட்ட சமூக நீதி விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்களுக்காக நடத்தப்பட்ட ”களமாடு பல்திறன் போட்டிகளில்" வெற்றி பெற்ற மாணவ - மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், அவர்களிடம் பாராட்டுச்சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார்.
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் விடுதி மாணவர்களின் படைப்பு கலை மற்றும் விளையாட்டுத் திறமைகளை அடையாளம் காணும் நோக்கத்துடன், தந்தை பெரியாரின் பிறந்த நாளான (17.09.2025) "சமூகநீதி தினம்" மற்றும் "களமாடு மற்றும் கலை கொண்டாட்டம்" என்ற திட்டம் தொடங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அக்டோபர் 2025-ல் தூத்துக்குடி சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதி, அரசு சமூகநீதி கல்லூரி மாணவியர் விடுதி, அரசு சமூகநீதி நாகம்பட்டி அரசு சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதி, புதூர் கல்லூரி மாணவர் விடுதி ஆகியவற்றில் களமாடு போட்டிகள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரின் மேற்பார்வையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், பரிசுகளை வழங்கினார். மேலும், பரிசு வென்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களை மாவட்ட ஆட்சியருடன் ஒரு சிறிய உரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த உரையாடல் மாணாக்கர்களின் எதிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாகவும் ஒரு உந்துதலாகவும் அமைந்தது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பெனட் ஆசீர் மற்றும் மாணவ – மாணவியர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
