களை கட்டும் தேர்தல்: அதிமுகவில் விருப்பனு வழங்குவதில் போட்டோ போட்டி.!

 

தேர்தல் களை கட்டும் அதிமுகவில் விருப்பனு வழங்குவதில் போட்டோ போட்டி நடக்கிறது. கடந்த தேர்தலில் வெற்றித் தொகுதியான தூத்துக்குடியை கூட்டணி கட்சிக்கு தாரைவார்த்தால் தொகுதிக்குள் அதிமுகவுக்கு ஏற்பட்ட பின்னடைவில் இருந்து மீட்சி பெற ஓர் புதிய வழித்தடத்தில் நிர்வாகிகளை முன்னெடுத்துள்ளது எடப்பாடி தலைமையிலான அதிமுக. 

அதன்படி 2026 தேர்தல் பேச்சுவார்த்தை  தொடங்கிய போது, கட்சிக்குள் சி.தா. செல்லப்பாண்டியன் பெயரை மட்டுமே உச்சரித்து வந்த நிலையில், இன்றைய நாள் வரையிலான விருப்ப மனுவில் செல்லப்பாண்டியன் உள்ப்பட அந்தோணி கிரேஷி, ஜெபா ஹென்றி, ஆனந்தராஜ், மணிகண்டன், சுதாகர், வழக்கறிஞர் பிரபு என்று தற்போது ஒரு பட்டாளமே தூத்துக்குடியில் போட்டி களத்திற்கு வந்ததை அதிமுக தலைமை மட்டுமல்ல, எதிரணி திமுகவுமே எதிர்பார்த்திருக்க இயலாது. 

இது குறித்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறுகையில்:-

"தேர்தலில் போட்டியிட அதிமுகவில் வாய்ப்பு யாருக்கு வேண்டுமானாலும் கிடைக்கலாம். "திமுகவை போல இவருக்கு தான் சீட்டு என்று, அதிமுகவில் அன்றும் சொல்ல முடியாது, இன்றும் சொல்ல இயலாது". அந்த அளவுக்கு கட்டமைக்கப்பட்ட ஓர் பேரியக்கம் ஆக "அதிமுக" மக்கள் மத்தியில் பெயர் பெற்றுள்ளது.

மேலும், கடந்த தேர்தலில் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டை கையில் எடுத்த திமுக வால், சிறுபான்மை மக்களிடம் மதவாத அரசியலை தினித்து ஓட்டு அரசியலை பிளவுபடுத்திய திமுக வால்,  அதிமுகவை தேர்தல் களத்தில் மக்கள் விரோத ஆட்சியாக மூளை சலவை செய்த திமுக வால், போலியான வாக்குறுதிகளை ஆசை வார்த்தைகளாக மக்கள் மனதில் விதைத்த திமுக வால் இம்முறை ஏமாற்றி ஜெயிக்க முடியாது என்ற நம்பிக்கையை அதிமுக நிர்வாகிகள் உறுதி செய்ததால், இம்முறை பலரும் போட்டியிட வாய்ப்பு கேட்கின்றனர் என்பதே அதிமுக தரப்ப்பில் சொல்லப்படும் உண்மையாகும். 

எதிரணி திமுகவில், பெரியசாமி குடும்பத்தை தவிர்த்து வேறு யாருக்கும் திமுக தலைமை வாய்ப்பு வழங்காது என்பதால், மற்றவர்கள் யாரும் போட்டி அரசியலுக்குள் வருவதில்லை. இதன் காரணமாக மற்றவர்கள் யாரும் தனக்கு சீட் வேண்டும் என்று கேட்டு விருப்ப மனு வழங்குவதும் இல்லை‌. இதனால் தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் கீதா ஜீவன் தான் என்பதை அதிமுக தரப்பு உறுதி செய்து கொண்டதால், இவருக்கு நிகரான பலம் பொருந்திய நபரை வேட்பாளராக அறிவிக்க காத்திருக்கிறது. 

மேலும், அதிமுகவை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியும் கீதா ஜீவனை தோற்கடிக்க வேண்டும் என்ற இலட்சிய கணவுடன் ஓர் புதிய அறிமுகத்தை இம்முறை வேட்பாளராக அறிவிக்கும் என்று நம்பப்படுகிறது. இவர்களை தொடர்ந்து நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் கொள்கை எதிரியான திமுகவை இம்முறை வீழ்த்தியே ஆகவேண்டும் என்ற உறுதிமொழி ஏற்புடன் களத்தில் நிற்கிறது. இது அதிமுகவை காட்டிலும் தவெக வே கீதா ஜீவனை அதிகமாக மிரட்டுகிறது என்கின்றனர். 2026 தேர்தல்  களத்தில் கீதா ஜீவனை (திமுகவை) எதிர்க்க  பலம் வாய்ந்த வேட்பாளர் யாருமே இல்லை என்று கீதா ஜீவன் ஆதரவாளர்கள் சொல்லி வந்த நிலையில் அதிமுக மற்றும் தவெக வின் அரசியல் வியூகம் இவர்களை பயம் காட்ட தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தான் தொகுதி முழுக்க மக்களால் முன் மொழிகின்ற குறைகளை கீதா ஜீவன் ஆய்வு செய்தார், பார்வையிட்டார் என்று விளம்பரம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் தூத்துக்குடி  திமுகவுக்கு  ஏற்பட்டுள்ளது. 

அதிமுக மீது, திமுக முன் மொழிந்த அவச்சொல்லின் காரணமாக தொகுதிக்குள் ஏற்பட்ட பலவீனத்தை, எடப்பாடியார் மேற்கொண்ட "மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம்" என்ற முதல்கட்ட தேர்தல் பரப்புரைக்கு பின் தூத்துக்குடி தொகுதியில் அதிமுகவின் வெற்றியை உறுதி செய்து இருக்கிறது என்கின்றனர் அதிமுக தொண்டர்கள்.

எனவே, "இம்முறை தூத்துக்குடி தொகுதியில் போட்டியும் உறுதி - வெற்றியும் உறுதி என்று முழக்கமிடுவோம்" என்று சொல்லி கொள்வதில் நாங்கள்  பெருமைக்கொள்வோம் என்றார். 

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி