தூத்துக்குடி தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட விருப்ப மனு.!

 

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட நிர்வாகிகள் பலர் விருப்ப மனு அளித்துள்ளனர் இந்நிலையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் பில்லா விக்னேஷ் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி  பழனிசாமி போட்டியிட வேண்டும் என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் ஆலோசனையின் படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுவை கழக மகளிர் அணிச் செயலாளரும் முன்னாள் அமைச்சர்  வளர்மதிடம் வழங்கினார். 

உடன் கழக அமைப்புச் செயலாளர்கள் பி ஜி ராஜேந்திரன் சுதா பரமசிவம் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கல்லூர் வேலாயுதம் கழக செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர்கள் சொக்கலிங்கம் சகாயராஜ் ஆகியோர் இருந்தனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி