தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகளுக்கு தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் வாழ்த்து.!

 

தூத்துக்குடி தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்கத்தின் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் தலைமையில், கலெக்டர் இளம்பகவத், கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

சந்திப்பின் போது, சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்களின் பணிநலன், பாதுகாப்பு மற்றும் சேவை தொடர்பான கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதில் ஊர்தி ஓட்டுநர்களின் பங்கு முக்கியமானது என்பது குறித்து எடுத்துரைத்தனர்.

மாவட்ட நிர்வாக அதிகாரிகள், சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்ததுடன், அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் பொறுப்புடனும் ஒழுக்கத்துடனும் சேவை செய்து வருவதை பாராட்டினர். எதிர்காலத்தில் சங்கத்துடன் இணைந்து பணியாற்ற ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர். இந்த மரியாதை சந்திப்பு நல்லிணக்கமான சூழலில் நடைபெற்றது. 

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர் சங்க மாவட்ட தலைவர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் ஜெயசீலன் ராஜ்குமார், துணைத் தலைவர்கள் குணசிங், மைக்கேல் ராஜ் லட்சுமணன், மாநில செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், மாவட்ட துணைச் செயலாளர் முருகன், அமைப்பாளர் ஜோதி முத்து, தணிக்கையாளர் லெட்சுமி காந்தன், கொள்கை பரப்புச் செயலாளர் லிங்கம் பிரபாகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி