தூத்துக்குடியில் 16வது தேசிய வாக்காளர் தினம் : ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு.

 

தூத்துக்குடியில் 16வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்திய தேர்தல் ஆணையம், இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையால் உருவாக்கப்பட்ட ஜனவரி 25ம் தேதி 1950 ஆண்டினை நினைவு கோரும் வகையில் ஜனவரி 25, 2011 ஆம் ஆண்டு முதல் தேசிய வாக்காளர் தினமாக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இதன்படிதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தலைமையில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், உதவி ஆட்சியர் (பயிற்சி) தி.புவனேஷ்ராம், மற்றும் அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி