தூத்துக்குடி : புகையிலை பொருட்களை கடத்திய வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது.!
புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சரக்கு வாகனத்தில் கடத்திய வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (42), வடிவேல்முருகன் (44) மற்றும் மகேஷ்வரன் (30) ஆகியோர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (1982) கீழ் நடவடிக்கை எடுக்க புதியம்புத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் சுந்தரமூர்த்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்க்கு வேண்டுகோள் விடுத்தார்.
அதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் மேற்படி 3 எதிரிகள் நேற்று (22.01.2026) தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
