தூத்துக்குடியில் 9ம் வகுப்பு மாணவன் ஓட்டிச்சென்ற பைக் விபத்திற்குள்ளானதில் மாணவர் உயிரிழப்பு.
பைக்கில் டியூசன் சென்றபோது சாலையோர பள்ளத்தில் இறங்கியதால் பின்சீட்டில் இருந்து கீழே விழுந்த மாணவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழப்பு
தூத்துக்குடி அண்ணா நகர் ஆறாவது தெருவைச் சேர்ந்தவர் அப்துல் காதர் மகன் அகமது யாவித் (14), இவர் தூத்துக்குடி ரெங்கநாதபுரத்தில் உள்ள ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை 8:30 மணி அளவில் தனது வீட்டில் இருந்து மின்சார பைக்கில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.
பண்டுகரை பக்கிள் ஓடை, பர்மா காலனி சாலையில் சென்றபோது வாகனம் திடீரென விபத்துக்குள்ளானதில் அகமது யாவித் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். மாணவன் சென்ற வாகனம் மீது ஏதோ ஒரு வாகனம் மோதி விட்டு சென்றதாக அப்பகுதியில் உள்ள சிலர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
.jpg)