பார்க்கிங் வசதி இல்லாத திருமண மண்டபத்தால் பகுதி மக்கள் பரிதவிப்பு - மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட SS.மாணிக்கபுரம் (குடியிருப்பு) பகுதியில் அமைந்துள்ள ஜோசப் ஜெயராணி (JJF) மஹாலில் சுப தின விஷேசங்கள் நடக்கும் போதெல்லாம் அந்த 60 அடி சாலையில் வாகன நெருக்கடி ஏற்படும் விதமாக "விழாவிற்கு வருகின்ற வாகனங்கள்" நிறுத்தப்படுகிறது. குடியிருப்பு பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டு வாசலையும் மறித்து வாகனம் நிறுத்துவதால் வீட்டு உரிமையாளருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையே வாய் வார்த்தையால் சலசலப்பாகி கை கலப்பாகவும் (அடிதடியாகவும்) மாறுகிறது. சவுண்ட்ஸ் சத்தமும், வெடி சத்தமும் பகுதி மக்களுக்கு பல்வேறு இடையூறுகளை தருவதாகவும், சுப விழாவிற்கு வரும் மது பிரியர்களின் அட்டூழியம் மரண பயத்தை கொடுப்பதாகவும் பகுதி சார்ந்த பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இது மாணிக்கபுரத்தில் மட்டும் அல்ல, குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் எங்கெல்லாம் திருமண மண்டபம் இருக்கிறதோ அங்கெல்லாம் இந்த அபாய நிலையும், அவல நிலையும் தொடர்கிறது என்பதை மாநகராட்சி நிர்வாகமும், காவல்துறையும் கவனத்தில் கொள்வது அவசியமாகி உள்ளது.
"நடவடிக்கை எடுப்பார்களா? நழுவி கொள்வார்களா?" - என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

