பாலாறு வேளாண்மை கல்லூரி குடியாத்தம் குழு மாணவிகளின் வேளாண் அறிவியல் கண்காட்சி - வேளாண் இணை இயக்குநர் பங்கேற்பு.!
பாலாறு வேளாண்மை கல்லூரி ஊரக வேளாண்மை பணி அனுபவத்திட்டம் மூலம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் செங்குன்றம் பஞ்சாயத்து அலுவலகத்தில் வேளாண்மை கண்காட்சி நடைபெற்றது. இதில் மாணவிகள் கண்காட்சிக்கு தேவையான பொருட்களை ஏற்பாடு செய்து இருந்தனர்.
கண்காட்சியில் ஒருங்கிணைந்த பண்ணைய முறை, பல்லுயிர், காற்றாலை, விளிம்பு விவசாயம், காற்று மாசுபாடு, உரக்கடை, உழவன் செயலி,காய்கறி தோட்டம், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, அசோலா, பிளாஸ்டிக் தழைக்கூளம், மழை நீர் சேகரிப்பு, போன்ற முப்பதுக்கும் மேற்பட்ட வேளாண் சார்ந்த மாடல்கள் இடம்பெற்றன.
பாரம்பரிய விதை இரகங்கள்,வண்ண வண்ண பதாகைகளும் இடம்பெற்றன. அதில் வேளாண்மை சார்ந்த பொருட்கள் இடம்பெற்றன. கண்காட்சியில் சிறப்பு விருந்தினர்களாக வேளாண்மை துணைஇயக்குநர் ர.உமாசங்கர், இணை பேராசிரியர் நா.அ.சரவணன், மற்றும் தலைவர் கரும்பு ஆராய்ச்சி நிலையம் மேலாலத்தூர், சம்பத் நாயுடு, APC மெம்பர் வேலூர் ,மற்றும் பாலாறு வேளாண்மை கல்லூரி முனைவர். நா.தமிழ்செல்வன், பேராசிரியர் வேளாண் உழவியல் துறை, முனைவர்.வெண்ணிலா மேரி, உதவி பேராசிரியர், வேளாண் விரிவாக்கத்துறை, முனைவர். க.அருள்மணி, உதவி பேராசிரியர் வேளாண் பொருளாதாரத்துறை, ஜெ.பிரபு, உதவி பேராசிரியர் பயிர் மேலாண்மை & தோட்டக்கலைத் துறை, சங்கமேஸ்வரி பிரியா, உதவி பேராசிரியர் வேளாண் உழவியல் துறை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் செங்குன்றம் பகுதி விவசாயிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், குழு மாணவிகள்: சங்கவி வெ, சங்கீதா பெ, சினேகா சி, சினேகா அ, ஸ்ரீ வளர்மதி.வ, சுஜிதா ர, சுஜிதாஸ்ரீ ரா, சுருதிகா கு, தமிழிசை து, வர்ஷினி பிரியா மு, விஷ்ணுபிரியா.ஜ ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


