தூத்துக்குடி :அடையாளம் தெரியாத நபர் தூக்குபோட்டு தற்கொலை - அழுகிய நிலையில் மீட்டெடுப்பு.!
தூத்துக்குடியில் முத்துநகர் கடற்கரை பூங்கா அருகே பாழடைந்த கட்டிடத்தில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பூங்கா அருகில் ஒரு பாழடைந்த கட்டிடத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக வடபாகம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் ஒரு ஆண் சடலம் கிடந்தது.
உடலை மீட்டு போலீசார் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்து பல நாட்களுக்கு மேல் இருப்பதால் உடல் அழுகிய நிலையில் இருந்து. அவர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
