"உயிர் உள்ளவரை த.வெ.க.தான்... விஜய் தான் எனது நிரந்தர தலைவர் " - தமிழ் அஞ்சல் செய்திக்கு அஜிதா ஆக்னல் மறுப்பு.!
தூத்துக்குடி மாவட்ட முன்னாள் த.வெ.க பொறுப்பாளராக அறியப்பட்டவர் அஜிதா ஆக்னல். த.வெ.க வளர்ச்சிக்கு மாவட்டத்தில் பம்பரமாக சுழன்று சுழன்று பணியாற்றியவர். இந்நிலையில் கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட மாவட்ட செயலாளருக்கான வேட்பாளர் பட்டியலில் SDR சாமுவேல்ராஜ் பெயர் அறிவிக்கப்பட்டதில் அப்செட் ஆன அவர் தனக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கவில்லை எனக் கூறி தனது ஆதரவாளர்களுடன் பனையூரில் த.வெ.க தலைவர் விஜய்யின் காரை மறித்துப் போராடியது, பின்னர் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது என கடந்த மாதம் தமிழகத்தின் பரபரப்பு செய்தியில் இடம் பிடித்தார்.
இந்நிலையில் ஜனவரி 10ம் தேதி தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியனின் நினைவு தினத்தில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வத்திருந்த பொற்கொடியை, தூத்துக்குடி தவெக பிரமுகர் அஜிதா நேரில் சந்தித்து அறிமுகபடுத்திக் கொண்டார். பின்னர் வட சென்னை மேற்கு மாவட்ட 'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' கட்சியின் சிறுபான்மை அணி சார்பாக மாவட்ட செயலாளர் முகமது நாசீர் தலைமையில் ஓர் மாபெரும் நலத்திட்ட விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தவெக மீது விரக்தியில் இருக்கும் தூத்துக்குடி அஜிதா 'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' கட்சியின் விழாவில் கலந்து கொண்டு பொற்கொடிக்கு மரியாதை செலுத்திய சம்பவம் அரசியலில் பலரை பலவிதமான எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கியுள்ளது
இதனையடுத்து தவெக தலைமை மீது அஜிதா ஆக்னல் விரக்தியில் இருப்பதாகவும், விஜயின் ஒப்புதலுடன் தலைமையால் அறிவிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் உள்பட ஏனைய பொறுப்பாளர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவும் இல்லை, பொறுப்பாளர்களுடன் இணைந்து களப்பணி எதுவும் செய்யாத நிலையில் அவர் 'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' (Tamil Manila Bahujan Samaj) என்ற கட்சியில் இணையப் போவதாக தகவல் பரவியது. இது தொடர்பான செய்தி தமிழ் அஞ்சல் இனைய தளத்தில் வெளியானது.
இந்நிலையில் இது தொடர்பாக நம்மை தொடர்பு கொண்ட அஜிதா ஆக்னல் " நான் எந்த கட்சியிலும் இணையப் போவதில்லை " என்றும் "உயிர் உள்ளவரை த.வெ.க.வில் தான் இருப்பேன், எனது நிரந்தர தலைவர் தளபதி விஜய் தான் " என்று தெரிவித்த அவர், தமிழ் அஞ்சல் வெளியிட்ட செய்திக்கு மறுப்பு தெரிவித்தார்.
