தூத்துக்குடியில் பேராசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்.!
தூத்துக்குடி தூய மரியன்னைக் கல்லூரியில் மூட்டா மற்றும் ஏயூடி பேராசிரியர்கள் மாலை நேர காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் நடைபெற்ற காத்திருப்பு போராட்டம் மூட்டா கிளை செயலாளர் பேராசிரியர் தலைமையில் நடைபெற்றது.
அதில் ஒரே பணியை மேற்கொள்ளும் இரண்டு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அரசு பணியில் உள்ள கல்லூரி ஆசிரியர்கள் இடையே பாரபட்சம் காட்டுவது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 14 க்கு எதிரானது எனவும் அரசு கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டு ஊதியத்தை வழங்கிவிட்டு அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு அதே பணி மேம்பாட்டு ஊதியத்தை வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது என அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களின் கண்ணியத்தை பெரிதும் பாதிக்கிறது எனக்கோரி தூத்துக்குடி தூய மரியன்னைக் கல்லூரி வளாகத்தில் பேராசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
