தூத்துக்குடி தொழிலதிபர் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.!

 

தூத்துக்குடி சென்னை உட்பட இந்தியாவின் பல்வேறு துறைமுக நகரங்களில் SEA PORT LOGISTICS (SEAPOL) என்ற பெயரில் ஷிப்பிங் நிறுவனம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்களை திறம்பட நடத்தி வந்தவர் M.S. தாஜுதீன். இவருடைய சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணமாகும்.

1942 ம் ஆண்டு தூத்துக்குடி எம்பரர் தெருவில் A.M. Ahamed & Co என்னும் ஷிப்பிங் நிறுவனத்தை நிறுவிய பங்குதாரர்களில் முக்கியமானவராவர். இந்த நிறுவனம் பின்னர் பெருமளவில் வளர்ந்து தூத்துக்குடியில் ஆயிரக்கணக்காண தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி தூத்துக்குடியின் ஒரு அடையளமாக மாறியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சில ஆண்டுகளாக உடல் நலம் சரியில்லாது இருந்த அவர் இன்று காலை காலமானார். இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்:-

"சமூகநல ஆர்வலரும், இமாம் ஷாஃபி மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளருமான M.S.தாஜுதீன் அவர்கள் இன்று மறைவுற்ற செய்தி அறிந்து மிகவும் மனம் வருந்தினேன். இமாம் ஷாஃபி மெட்ரிகுலேஷன் பள்ளியை நிறுவி பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்குத் துணை நின்றவர். M.S.தாஜுதீன் அவர்கள், அவர்  நற்பணிகளின் வழியாக என்றென்றும் நினைவு கூரப்படுவார்" என தெரிவித்துள்ளார்.


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி