தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு சாலை பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்தல் மற்றும் நிறுவுதல் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு.!
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-
தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளதால் இப்பொருட்களை விற்பனை செய்ய விருப்பமுள்ள நிறுவனங்களுக்கு கீழ்க்கண்டவாறு ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்படுகிறது.
அதன்படி
*1. Breathing Analyzer – 53*
*2. Ahuja AM 22 HSD mega phone PA system - 09*
*3. 3 mm reflecting tape 50 mm x 50 Meter red colour - 40*
*4. 3 mm reflecting tape 50 mm x 50 Meter yellow colour - 40*
*5. Reflecting jacket red colour with police Logo - 80*
*6. Short type Baton light(Battery model)- 80*
*7. Charger Light - search Light 15w powerful LED Light 1000m Range - 66*
*8. Barricade - 262*
*9. 12 Handiy Camera - 12*
ஆகிய பொருட்கள் மேற்படி எண்ணிக்கையில் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
மேற்படி உபகரணங்களின் விபர குறிப்பு 10.02.2026 அன்று வழங்கப்படும், எனவே ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பிற்கு ஒப்பந்த நிறுவனங்கள், கொள்முதல் செய்ய உள்ள பொருட்களின் தரம் மற்றும் ஒப்பந்த புள்ளி குறித்து வருகின்ற 16.02.2026 அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. பின்னர் 17.02.2026 அன்று ஒப்பந்த புள்ளி திறக்கப்படும்.
மேலும் ஒப்பந்த புள்ளி பெறப்படும் நாளன்று அலுவலகத்திற்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்படின் அதற்கு அடுத்த வேலை நாளில் ஒப்பந்தப் புள்ளி பெறப்பட்டு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
