பழனியாண்டி எம்.எல்.ஏ.,மீது நடவடிக்கை கோரி செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பத்திரிகையாளர் சங்கம் மற்றும் அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம். மற்றும் திருப்பூர், தாராபுரம், அவிநாசி, பல்லடம், காங்கேயம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், ஆகிய செய்தியாளர்கள். சார்பாகவும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

கரூரில் நியூஸ் தமிழ் செய்தியாளர்கள் கல்குவாரி தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற போது   சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியால்  தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் உடனடியாக திமுக கட்சித் தலைமை அவரை கட்சித் தலைமைக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூலிப்படையை ஏவி விட்டு ரவுடிசத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ மீது அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே அவரை நீக்கம் செய்ய வேண்டும் என்பதே கோரிக்கையாக வைத்து சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று இப்பகுதி செய்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் பரவலாக நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள் ஒன்றிணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,அப்போது செய்தியாளர்கள் தங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் முன்கணப் பணியாளர்கள் என்று தமிழக முதல்வர் அறிவித்து பத்திரிகையாளர் நல வாரியம் ஏற்படுத்தினாலும் அதனால் எந்த ஒரு பலனும் இல்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவித்த நிலை உள்ளது.இந்த ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் பங்கேற்றிருந்தனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி