ராகுல்காந்தியை பிரதமராக அமரவைக்க வேண்டும்.. காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் நிவேதிக் ஆல்வா பேச்சு

ராகுல் காந்தியை இந்திய பிரதமராக அமர வைக்க காங்கிரஸ் கட்சியினர் உறுதி ஏற்க வேண்டும். திருப்பூரில் காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர். நிவேதித் ஆல்வா காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளுக்கு கோரிக்கை விடுத்தார்.

திருப்பூரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர் நியமனத்திற்கு நன்றி அறிவிக்கும் நிகழ்ச்சி பார்க் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் அலுவலகத்தில் புதிய வடக்கு மாவட்ட தலைவராக தேர்வு செய்யப்பட்ட செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளர். நிவேதிக் ஆல்வா கலந்துகொண்டு எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் எதிர்வரும் தேர்தல் என்பது மிகவும் நெருக்கடியான தேர்தல் என்றும் மக்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்களை இந்திய பிரதமராக அமர வைக்க ஒவ்வொரு காங்கிரஸ் கட்சி தொண்டரும் உறுதியற்ற வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து புதிதாக வடக்கு மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட குண்டடம் செல்வகுமார் அவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் தேசியச் செயலாளர். கோபிநாத் பழனியப்பன்,மாநில பொதுச்செயலாளர்.கார்த்திக் தங்கபாலு,மாநில கமிட்டி பொறுப்பாளர்.அசோக்
மாநிலச் செயலாளர்கள்.TDK. சித்திக்,முத்துராமலிங்கம்,மற்றும் அனைத்து வட்டார நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டன

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி