நான்கரை ஆண்டுகாலம் உறங்கி கொண்டிருந்த பலா் இப்போது எழுந்து நடக்கிறாா்கள். எந்த கொம்பனாலும் சூாியனை மறைத்து விட முடியாது, 2026 தோ்தலில் உதிப்பது உதயசூாியன்தான்" - தூத்துக்குடி பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு.!

 

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி தமிழ்நாடு தலைகுனியாது பொதுக்கூட்டம் சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மேயா் ஜெகன் பெரியசாமி, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமாா், நிா்மல்ராஜ், சுரேஷ்குமாா், மேகநாதன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.  

கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்:- 

"ஒன்றிய அரசின் புள்ளி விவரம் சொல்கிறது பொருளாதார வளர்ச்சியில் 11.19 சதவீதம் வளர்ச்சி பெற்று தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருக்கிறது. தொழில், தனிநபர் வருமானம் உயா்ந்துள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பட்டியலில் எண்ணிக்கை குறைந்துள்ளது. கல்வியில் சிறந்து விளங்குகிறது. உழைக்கும் பெண்கள் அதிகம் இருப்பது தமிழ்நாட்டில் தான் அதிக அளவு உயர்கல்வி பெரும் பெண்கள் என்று அனைத்திலும் வளர்ச்சி அடைந்து இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. தேர்தல் வந்த உடன் பாஜகவிற்கு தமிழ் மீது அதிக பாசம் வந்துவிட்டது. பிரதமர் மோடி எங்கு சென்றாலும் தமிழில் தான் பேசுகிறார் என்கிறாா்கள் ஓரு திருக்குறளை மட்டும் படித்தால் போதுமா ஏனென்றால் தமிழ்நாட்டிற்கு தேர்தல் வருகிறது. 

கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் தமிழன் பழமை வாய்ந்தவன் என்ற  ஆய்வு அறிக்கையை ஓன்றிய அரசுக்கு அனுப்பி உள்ளோம் அதை கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். தமிழன் என்ற இனம் 3 ஆயிரம் ஆண்டிற்கு முன்பு இருந்த இனம் என்பதை சொல்ல மனமில்லாத மோடிக்கு திடீரென்று தமிழ் மீது பாசம் வருகிறது. புதிய கல்விக் கொள்கையை கொண்டு வருகின்றனர். இதில் நுழைவுத் தேர்வு என்று கொண்டு வந்து  படிக்க முடியாது என்றாக்கி குலத்தொழிலுக்கு மீண்டும் அனுப்புவது தான் இந்தத் திட்டம். அதனால் தான் தமிழ்நாடு இதை எதிர்க்கிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மோடி அரசு சொல்கிறது. முடியாது என்கிறோம் அதனால் பணம் கொடுக்க மறுக்கின்றனர். கல்விக்கான நிதியை பாஜக அரசு தமிழகத்திற்கு ஒதுக்கவில்லை. 

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கிராமத்தில் வீட்டுக்கு வீடு பைப் அமைத்தனர் ஆனால் இதுவரை தண்ணீர் கொடுக்கவில்லை. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு கிராமத்திற்கு இதுவரை நிதி ஒதுக்கவில்லை. நிதி ஒதுக்கீடு செய்யாமல் நம்மை வஞ்சிக்கிறார்கள் அவர்கள் காலடியில் போய் விளனுமாம். நமது முதல்வா் சொல்லியுள்ளார் தமிழ்நாடு தலைகுனியாது. நமது முதல்வா் நெஞ்சை நிமிா்த்தி எதிர்த்து நின்று கொண்டிருக்கிறார். நீ என்ன செய்தாலும் பரவாயில்லை என்று. எவ்வளவு இடையூறு செய்தாலும் பரவாயில்லை வருமானவரித்துறை வருமா? அமலாக்கத்துறை வருமா? என்ன செய்தாலும் சரி தமிழ்நாடு வளர்ச்சி பெற வேண்டும் தமிழ் மொழியை நான் பாதுகாத்து விட வேண்டும் தாய் மொழியான தமிழ் மொழியை நாங்கள் காத்துக் கொள்வோம் என்ற முறையில் நமது முதல்வர் உறுதியாக இருக்கிறார்.

கவர்னர் என்ற முறையில் நமக்கு ஓர் இடைஞ்சல் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடக்கூடாது என்று சொல்கிறார். ஓர் இனத்தை அழிக்க வேண்டும் என்றால் முதலில் மொழியை அழிக்க வேண்டும் என்று சொல்வார்கள் தமிழ் மொழியை திராவிட இயக்கங்கள் பாதுகாத்து வருவதால் தான் இன்று நாம் எல்லோரும் மொழி பேசிக் கொண்டிருக்கிறோம்.  நாம் ஹிந்தி படிக்க வேண்டாம் என்று யாரையும் சொல்லவில்லை என்ன மொழி வேண்டுமானாலும் படிக்கலாம் ஆனால் இந்தி மட்டும் தான் இருக்கும் என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். தமிழ் இருக்க வேண்டும், ஆங்கிலமும் இருக்க வேண்டும்  அதுதான் திராவிட முன்னேற்ற கழக கொள்கை. அதேபோன்று நம்மிடத்தில் ஜாதி மத வேறுபாடு கிடையாது மத உணர்வை மதிக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். ஆனால் மதவெறி கொல்லக்கூடாது நாம் எல்லோரும் தமிழராக ஒன்றிணைவோம் என்பதுதான் முதல்வர் நமக்கு சொல்வது. 

எடப்பாடி யார் பாவம் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார் எதையோ புலம்பி கொண்டிருக்கிறார் சட்டசபையில் பெண்களுடைய உயர் கல்வி 48 சதவீதம் என்று நிதி அமைச்சர் பேசுகிறார் அதற்கு அவர் தமிழ்நாடு உயர் கல்வி வளர்ச்சியில் நீங்கள் என்ன ஆறு சதவிகிதம் குறைத்து விட்டீர்கள் என்று சண்டை போடுகிறார் ஒட்டு மொத்த உயர் கல்வியில் நாம் 54 சதவீதம் வளர்ச்சி ஆனால் பெண்களின் உயர்கல்வியில் இந்தியாவிலே நாம் 48 சதவிகிதம். எதற்கு சொல்கிறார்கள் என்ன சொல்கிறார்கள் என்று புரியாமல் பாஜகவுடன் கூட்டணி வைத்துவிட்டார். டெல்லி அணி தான் இன்று எல்லாம் முடிவு செய்கின்றனர் இந்த தேர்தலில் நாம் முடிவு செய்ய வேண்டியது தமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டுமானால் தமிழ் மொழியை பாதுகாக்க வேண்டுமானால் கலாச்சாரம் பண்பாட்டை பாதுகாக்க வேண்டுமானால் வருகின்ற தேர்தலில் மீண்டும் தளபதியார் முதலமைச்சராக வேண்டும் இது காலத்தின் கட்டாயம்.

எவ்வளவு இடையூறு கொடுத்தாலும் எதிர்த்து நிற்பார் மக்களிடத்தில் நமது கூட்டணிக்கு நல்ல ஆதரவு இருக்கிறது ஏற்கனவே உள்ள கருத்துக்கணிப்புகள் எல்லாம் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று கூறுகிறார்கள் நான்கரை ஆண்டுகாலம் உறங்கி கொண்டிருந்த பலா் இப்போது எழுந்து நடக்கிறாா்கள். எந்த கொம்பனாலும் சூாியனை மறைத்து விட முடியாது 2026 தோ்தலில் உதிப்பது உதயசூாியன்தான் இந்த தொகுதியில் புதிதாக மக்கள் நலன் கருதி 210 புதிய டிரான்ஸ்பாா்மா்கள் அமைக்கப்பட்டுள்ளது. மீண்டும் திமுக ஆட்சி அமைந்தபின் ரூ2000 உாிமைத்தொகை வழங்கப்படும். திமுக கூட்டணி வெற்றி பெறுவதற்கு அனைவரும் துணை நிற்க வேண்டும். என்று அமைச்சா் கீதாஜீவன் பேசினாா். 

மாநில பேச்சாளா்கள் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் சரத்பாலா கோபிநாத் காமராஜ் இருதயராஜ் தமிழ்பிாியன் ஆனந்தன் உள்ளிட்டோா் பேசினாா்கள். 

கூட்டத்தில் மாவட்ட அவைதத்தலைவா் செல்வராஜ், துணைச்செயலாளா்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், பொருளாளா் ரவீந்திரன், துணை மேயா் ஜெனிட்டா. மாநில அணி நிா்வாகிகள் புளோரான்ஸ், அன்பழகன், மாநகர துணை செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூாிதங்கம், மண்டலத்தலைவா்கள் வக்கீல்பாலகுருசுவாமி, கலைச்செல்வி,

மாவட்ட அணி நிா்வாகிகள் அபிராமிநாதன், அந்தோணிஸ்டாலின், கவிதாதேவி, சீனிவாசன், குபோ் இளம்பாிதி, அந்தோணிகண்ணன், அருணாதேவி, பிரபு, நாகராஜன், பாா்வதி, செல்வி, ராமா், கணேஷ்குமாா், நிக்கோலாஸ்மணி, அருண்குமாா், முத்துராமன், மாநகர அணி நிா்வாகிகள் ஜீவன்ஜேக்கப், ஜெயக்கனி, ஆனந்தசேகா், கிறிஸ்டோபா் விஜயராஜ், சாரதி, சாகுல்ஹமீது, மகேஸ்வரன்சிங், பால்ராஜ், தனபால், சத்யா, நாராயணவடிவு, சந்தனமாாி, நைஸ்பரமசிவம், ரூபராஜா, நாகராஜன், செல்வமுருகன், ரவி, செல்வின், ராமசந்திரன், சீதாலட்சுமி, செந்தில்குமாா்,  பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவா் செந்தில்குமாா், மாவட்ட பிரதிநிதிகள் சோ்மபாண்டியன், நாராயணன், செல்வகுமாா், ராஜ்குமாா், சுரேஷ், கவுன்சிலா்கள் இசக்கிராஜா, சரவணக்குமாா், கண்ணன், பொன்னப்பன், வைதேகி, ஜாக்குலின்ஜெயா, ஜான்சிராணி, சுப்புலட்சுமி, கந்தசாமி, பவாணி,  ராமா், ஜான், ராஜதுரை, பட்சிராஜ் விஜயகுமாா், 

வட்டச்செயலாளா்கள் பாலகுருசாமி,டென்சிங் சுப்பையா, மந்திரகுமாா், பொன்பெருமாள், ரவீந்திரன், முனியசாமி, ராஜாமணி, சுரேஷ், சேகா், கருப்பசாமி, சுரேஷ்மகாராஜா, சந்தனமாாிமுத்து, செல்வராஜ், பொன்னுசாமி, சிங்கராஜ், பகுதி அணி அமைப்பாளர்கள் குமாா், சூா்யா, சுரேஷ்குமாா், நிா்வாகிகள் அருணகிாி, ராஜா, பிரபாகா், ஜேஸ்பா், மற்றும் மணி, அல்பட்  உள்பட பலர் கலந்து கொண்டனா். பகுதி செயலாளா ரவீந்திரன் நன்றியுரையாற்றினாா்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி