ஆதிதிராவிட மக்களின் 25 ஆண்டு கால தீரா பிரச்சனை - அமைச்சர் கீதா ஜீவன் தீர்த்து வைப்பாரா ? புறக்கணிப்பாரா ?
தூத்துக்குடி மாப்பிள்ளையூரனி பகுதியில் உள்ள ஜோதிநகரில் ஆதிதிராவிட மக்களுக்கு என வழங்கப்பட்ட இலவச வீட்டுமனையை, மாற்றியமைக்க நடத்தப்பட்ட அரசியல் சார்ந்த முயற்சியையும் சூழ்ச்சியையும் முறியடித்து, அரசு கொடுத்த இடத்தை மீட்டெடுக்க இம் மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததை தொடர் செய்திகள் மூலம் தூத்துக்குடி பொது மக்கள் அறிவர். பல ஆண்டுகளாக போராடி வந்த இம்மக்களின் உரிமை போராட்டம் 2021 முதல் கூடுதல் வீரியம் பெற்றது.
போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியும், தமிழக வெற்றிக் கழகமும் மக்களோடு களத்தில் நின்றது. மற்ற எவரும் இவர்களை கவனத்தில் கொள்ளவில்லை. இதையும் தாண்டி சொல்ல வேண்டுமானால் இப்பிரச்சனையை முதன் முதலாக கையில் எடுத்து முன்னால் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் தமிழரசி மூலமாக தடுத்து நிறுத்தியவர் தான் முன்னாள் கவுன்சிலர் கே.வி.கே.சாமி (மாணிக்கபுரம்) . அதன் பின் இந்த முயற்சியை வழி நடத்தியவர்கள் சார்லஸ், மனுவேல், நெப்போலியன் உள்ப்பட அம்பேத்கர்நகரை சேர்ந்தவர்கள் இந்த இடத்தை சுத்தம் செய்து நில அளவை சரி செய்தார்கள். அதைப்போலவே கலா ஞானம், மேரி ஜான், எலிசபெத், எஸ்தர் அந்தோணி சாமி, செல்வி ஜேம்ஸ், ஜெகதா ரவி உள்ப்பட இரட்சண்யபுரம் சார்ந்த போராட்டக்காரர்களின் முயற்சியும் இப்பிரச்சனையில் தீர்வு கிடைக்க கை கொடுத்தது. ஆனால் நடக்கும் பிரச்சனைக்கு இன்னும் நிரந்தர தீர்வு கிடைக்கப்பெறவில்லை.
அனைத்து முயற்சிகளும் தீவிரப்படுத்தி வரும் இந்த கால சூழ்நிலையில் இம்மக்களின் போராட்டத்திற்க்கு விடியலாக எந்தவொரு அரசானையும் ஆதிதிராவிட நலத்துறை சம்பந்தமாகவோ, மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாகவே இதுவரையில் வெளிவரவில்லை.
இதனால் ஜோதி நகரில் ஆதிதிராவிட மக்களுக்கு என வழங்கப்பட்ட இடத்தில் ஓர் விளம்பர பாதகை நிறுத்தப்பட்டுள்ளது. அந்த விளம்பர பாதகை அரசு சார்பாக வைக்கப்பட்டுள்ளதா? அல்லது பயனாளிகள் தங்களுடைய சொந்த முயற்சியில் வைக்கப்பட்டதா? என்ற குழப்பம் இப்பிரச்சனையில் புதியதாக தொடர்கிறது. தேர்தல் சமயத்தில் இம்மக்களை ஏமாற்றி இப்பிரச்சனையை திசை திருப்பும் முயற்சியாக இருக்குமோ என்ற சந்தேகமும் இதன் மூலமாக எழுகிறது.
ஆகவே இப்பிரச்சனைக்கு ஆதிதிராவிட நலத்துறை சம்பந்தமாக நிரந்தர தீர்வு காண அமைச்சர் கீதா ஜீவனும் மாவட்ட ஆட்சித்தலைவரும் முன்வரவேண்டும் என்பது ஆதிதிராவிட மக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த பிரச்சனை கடந்த 25 வருஷமாக முடிவில்லாமல் தொடர்வதற்கு காரணம், "ஆதிதிராவிட மக்களிடையே ஒற்றுமை இல்லாததே " என்கின்றனர் பொதுமக்கள்.
ஆகவே, இனியும் இப்பிரச்சனையை தொடரவிடாமல் - ஒன்றுபட்டு இந்த இடத்தை மீட்டெடுக்க முயற்சிப்போம் என்பதே ஆதிதிராவிட மக்களின் உறுதிமொழியாக ஒலிக்கிறது. ஆதிதிராவிட மக்களின் 25 கால தொடர் பிரச்சனையை அமைச்சர் கீதா ஜீவன் தீர்த்து வைப்பாரா ? அல்லது இத்தனை ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் இருந்தது போல் இருந்து புறக்கணிப்பாரா என்பதுதான் ஆதிதிராவிட மக்களின் தற்போதைய கேள்வி?
