தூத்துக்குடி : சிறுவன் கடத்தல் - 30 நிமிடங்களில் கடத்தியவர்களை கைது செய்த போலீசாருக்கு எஸ் பி பாராட்டு!

 

குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 2½ வயது சிறுவனை இருசக்கர வாகனத்தில் கடத்திய சம்பவத்தில் 30 நிமிடங்களில் சிறுவனை கடத்திய கணவன் மனைவி கைது செய்யப்பட்டு கடத்தப்பட்ட சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டு கடத்தப்பட்ட சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.

குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  கீழமலையன் தெருவில் உள்ள வயதான பெண்மணி ஒருவரின் பெட்டிக்கடை அருகே அவரது 2 ½ வயது பேரன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அக்கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினர் அந்த 2 ½ வயது சிறுவனிடம் பேச்சுக் கொடுத்து திடிரென அச்சிறுவனை அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தில் கடத்திக் கொண்டு சென்றுள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத பெட்டிக்கடையில் இருந்த குழந்தையின் தாயார் உடனடியாக சத்தம் போட்டுள்ளார். மேலும் குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குலசேகரன்பட்டினம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரேணுகா, தலைமை காவலர்கள் ராமச்சந்திரன், செந்தில்குமார் மற்றும் ஜெபக்குமார் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு குலசேகரன்பட்டினம் to திருச்செந்தூர் சாலையிலுள்ள ஒரு கோயிலின் அருகே இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட குழந்தையுடன் சென்றுகொண்டிருந்த தம்பதியினரை மடக்கி பிடித்து கடத்தப்பட்ட 2 ½ சிறுவனை பத்திரமாக மீட்டனர். மேலும் மேற்படி தம்பதியினரையும் உடனடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்த லிங்கதுரை 35/26 மற்றும் அவரது மனைவி ஜெயந்தி 33/26 ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி குழந்தை கடத்தப்பட்ட 30 நிமிடங்களில் துரிதமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டு, சிறுவனை கடத்திய தம்பதியினரை கைது செய்த குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் வெகுவாக பாராட்டினார்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி