இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு காலமானார் - மருத்துவமனைக்கு உடல் தானம்.!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக அரசியல் களத்தின் மிக முக்கியமான ஆளுமையுமான தோழர் ஆர்.நல்லகண்ணுவுக்கு அதி தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்து வந்த நிலையில் பலனளிக்காமல் இன்று மதியம் 1.15 மணிக்கு உயிர் பிரிந்தது..
101 வயதைக் கடந்த நிலையிலும் பொதுவாழ்வில் மிகவும் எளிமையாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கி வந்த அவர், வயது மூப்பு சார்ந்த சில உடல்நலப் பாதிப்புகள் காரணமாக தற்போது சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்
வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நல்லகண்ணுக்கு சிறுநீர் கழிப்பது குறைய தொடங்கியதால், கடந்த டிசம்பர் 28-ம் தேதி ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது மூப்பு காரணத்தால் வேறு சில பிரச்சினைகளும் இருந்ததால், அவரது உடல்நிலையை கண்காணித்து தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்தனர்
அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்ததும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் மிகுந்த கவலை அடைந்ததோடு, அவர் விரைவில் நலம்பெற வேண்டுமென வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர்..
இந்த சூழ்நிலையில், சமூக வலைதளங்களில் ஆர்.நல்லகண்ணுவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து விட்டதாக சில வதந்திகள் பரவின.. குறிப்பாக, நடிகர் மன்சூர் அலிகான் அவரை நேரில் சந்திக்க சென்றபோது, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறி செய்தியாளர்கள் முன்னிலையில் கண்ணீர் விட்டு அழுதார்.. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது..
ஆனால், இத்தகைய செய்திகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை முற்றிலுமாக மறுத்துள்ளது.. கட்சி வெளியிட்டுள்ள விளக்கத்தில், நல்லகண்ணு அவர்கள் வயது முதிர்வு காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டது.. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் கட்சி நிர்வாகம் உறுதிப்படுத்தியிருந்தது.
இந்த தகவல் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு மிகுந்த நம்பிக்கையை தந்தது.. ஆனால் அதிதீவிர சிகிச்சை பலனளிக்காத நிலையில், அவரது உயிர் பிரிந்தது. இதை அரசு மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது..
இன்று மதியம் 1.15 மணியளவில் காலமானார். தோழர் நல்லக்கண்ணு மறைவுக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், " நல்லக்கண்ணு அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 24 தினங்களாக சிகிச்சையின் போது அவரது உடல் நிலையில் ஏற்றதாழ்வுகள் இருந்து வந்தது. " என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்," பல்துறை மருத்துவக்குழு தீவிர சிகிச்சையும், அதிதீவிர கண்காணிப்பையும் தொடந்து வந்தனர். இன்று அதிகாலை முதல் மருந்துகளை ஏற்கும் தன்மை படிப்படியாக குறைந்து, அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது." என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
'அதிதீவிர சிகிச்சையில் இருந்தபோதும் முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்ததால், நல்லக்கண்ணு அவர்கள் 25. 02. 2026 அன்று பிற்பகல் 1. 55 மணியளவில் நம்மை விட்டு பிரிந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.' என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் இரா. நல்லகண்ணுவின் உடல் மருத்துவ மாணவர்களின் கல்விக்காக தானமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
