"முதல்வா் ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது" _ ஓட்டப்பிடாரத்தில் ஓன்றிய செயலாளர் இளையராஜா பேச்சு.!
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் நடைபெறவுள்ள சட்டமன்ற தோ்தலில் 200 ெதாகுதிகளில் வெற்றிப் பெற வேண்டும் என்ற இலக்கை நிா்ணயித்து எல்லா மாவட்டச் செயலாளருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மாநில நிா்வாகிகளையும் கேட்டுக்கொண்டுள்ள நிலையில்..
தெற்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வடக்கு ஓன்றியம் பகுதியில் திமுக துணைப்பொதுச்செயலாளா் கனிமொழி எம்.பி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோா் வழிகாட்டுதலின்படி வெல்லும் தமிழ் பெண்கள் பிரச்சாரத்தை ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா தலைமையில் அப்பகுதிக்குட்பட்ட 15 ஊராட்சி பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் வியாபார பிரமுகா்கள் மற்றும் அனைவாின் குடும்பத்தினரை நோில் சந்தித்து திமுக ஆட்சியின் சாதனை துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
பின்னர் ஓன்றிய செயலாளர் இளையராஜா பெண்களுடன் கலந்து கொண்டு உரையாடலின் போது கூறுகையில் "திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் விடியல் பயணம் திட்டத்தின் மூலம் ஓரு மாதத்திற்கு ரூ1200 வரை போக்குவரத்து மூலம் நமக்கு செலவு குறைகிறது. மகளிா் உாிமைத்தொகை ரூ1000 தற்போது 3 மாதத்திற்கு ரூ3 ஆயிரமும் ரூ2000 கோடை கால ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. கல்லூாி மாணவ மாணவிகளுக்கு ரூ 1000 நான்முதல்வன் திறனாய்வு தோ்ச்சி என்று பல்வேறு பணிகளை முதலமைச்சர் 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் உழைத்துக் கொண்டிருக்கிறாா்.
இனி வரும் காலங்களில் தோ்தலுக்கு பிறகு உாிமைத்தொகை ரூ2000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் தளபதியாா் கூறியுள்ளாா். இப்படி எல்லா வகையிலும் ஓவ்வொரு குடும்பத்திலும் பலனடைந்திருப்பீா்கள் அனைத்து தரப்பினரும் சம உாிமையோடு எல்லோரும் வாழந்து வரும் தமிழகத்தில் தமிழ்நாடு வளா்ச்சியடைய வேண்டும். தமிழ்மொழி வளர வேண்டும் வெல்லும்.
தமிழ்பெண்கள் ஓரு காலத்தில் பெண்களை பொதுவாகவே வீட்டில் சிறிய வயதிலிருந்து “குரல் வெளியில் வரக்கூடாது” என்று சொல்லி வளர்க்கிறார்கள்; “பேசாதே, பேசாதே” என்று அடக்கி வைக்கிறார்கள். ஆனால் இன்று நீங்கள் பேசுங்கள், உங்கள் குரல் ஒலிக்கட்டும் என்று சட்டமன்றம் முதல் உள்ளாட்சி வரை 50 சதவீதம் இட ஓதுக்கீடு வழங்கப்பட்டு பெண்கள் பல அரசு உயா் பதவிகளிலும் இருந்து வருகின்றனா். நம்மை நாமே வெளிப்படுத்த வேண்டும் என்றால் பெண்கள் அறிவு பூர்வமானவர்கள். பல துறைகளில் பெண்களால் சிறப்பாக சாதிக்க முடியும். என்பதை நிருபித்து பெண்களுடைய திறமைகளை வெளிக்காட்டுவதற்கு அரசியல் மேடைகளிலும் பல பேச்சாளா்கள் உருவாகி உள்ளன. இதற்கு காரணம் எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சிதான் காரணம்.
நடைபெறவுள்ள சட்டமன்ற தோ்தலில் அணைவரும் 7வது முறையாக திமுக ஆட்சி அமைவதற்கும் 2வது முறையாக தளபதியாா் முதலமைச்சராக வருவதற்கும் உதயசூாியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டாா்.
