கோரம்பள்ளம் குளம் தூா் வாரும் பணியை சண்முகையா எம்.எல்.ஏ தொடங்கி வைத்தாா்.
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோரம்பள்ளம் குளம் 20 கோடி மதிப்பீல் தூா்வாரும் பணியை பூஜையுடன் சண்முகையா எம்.எல்.ஏ தொடங்கி வைத்து பேசுகையில் தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க விவசாயிகளின் நலன் கருதி 20 கோடி மதிப்பீல் தூா் வாரும் பணிகள் துவங்க உள்ளது அதிக அளவில் தண்ணீர் தேக்கி வைத்து விவசாயிகள் பாசனத்தின் பயன்பாட்டிற்கு நன்மை கிடைக்கும் தளபதியாா் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் எல்லா பணிகளும் மக்களுக்கான பணிகளாக நடைபெற்று வருகிறது. இதை நல்லமுறையில் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். என்று பேசினாா்.
விழாவில் நீா்வளத்துறை செயற்பொறியாளா் தங்கராஜன், உதவி செயற்பொறியாளா் சிவராஜன், ஓன்றிய செயலாளர் ஜெயக்கொடி, பகுதி செயலாளர் ஆஸ்கா், தெற்கு மாவட்ட மகளிா் சமூக வலைதள பொறுப்பாளரும் வெல்லும் தமிழ்பெண்கள் ஸ்டாலின் படை ஓட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளருமான மீனாட்சி, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சைமன், தகவல் தொழில்நுட்ப அணி மணிகண்டன், விவசாய அணி துணை அமைப்பாளர் அாிகிருஷ்ணன் கோபால், கலை இலக்கிய அணி தலைவர் பொன்னரசு, பொறியாளர் அணி அமைப்பளார் ஆனந்த், கிளைச்செயலாளர் பெருமாள், மற்றும் கப்பிக்குளம் பாபு, உள்பட அரசு துறை அலுவலா்கள் விவசாயிகள் கலந்து கொண்டனா்.
