"அதிரடி அரசியலை நான் ஆரம்பித்தால் உங்களால் தாங்க முடியாது"- அதிமுக, பாஜகவினரை குறிவைத்து மேயர் ஜெகன் பொியசாமி ஆவேசம்.!

 

தூத்துக்குடியில் தமிழகம் தலைகுனியாது என திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார். 

கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பொியசாமி பேசுகையில்:-

இந்தப் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது தெருவில் நிற்கும் 100 பேரை அழைத்து நிற்க வைத்து அமர வைத்து நமது தலைவரும் தமிழக முதலமைச்சரையும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரையும் மாவட்ட அமைச்சரையும் மாநகராட்சியையும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும் 2 கோடி ஒன்பது லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் இதை நாம் முழுவதும் பெற்றுவிடலாம் ஒவ்வொரு வரும் 50 வாக்குகள் திமுகவிற்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும்.  அதன் மூலம் நாம் வெற்றி பெற்று விடுவோம். 200 தொகுதி நமது இலக்கு அதனை நாம் அடைந்து விடுவோம் வேட்பாளரை நமது தலைவர் அறிவிப்பார் அந்த வேட்பாளரை நாம் வெற்றி பெற செய்ய வேண்டும். 280 பாகம் இருந்த இடத்தில் 360 பாகமாக மாறிவிட்டது. இளைஞர்கள் இருந்தால்தான் எதையும் சாதிக்க முடியும் செயல்படுத்த முடியும். 

எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டேன். தூத்துக்குடி காரங்க பாசக்காரங்க. மக்களின் சேவைப் பணியை நாம் தொடங்கி கொண்டே இருக்க வேண்டும் தெருமுனைப் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சியினர் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர். கொரோனா காலத்தில் நமது தலைவரின் ஆட்சி ஆரம்பம் ஆனது. ஓன்றிய அரசு என்னதான் நெருக்கடி கொடுத்தாலும் இந்தியாவுக்கே முன்மாதிரியாக  அதையெல்லாம் சமாளித்து தமிழகம் சாதனை படைத்து வருகிறது. 

அதிமுக முன்னாள் மேயர் முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா அப்போது தன் கட்சிக்கு எந்த பணியும் செய்யவில்லை. ஆனால் தற்போது பாரதிய ஜனதா கட்சி மாநில துணைத்தலைவராக இருக்கும் சசிகலாபுஷ்பா தான் இருக்கும் கட்சிக்கு கூட அவர் உதவி செய்தது கிடையாது. 2014 வரை மேயராக சசிகலா புஷ்பா இருந்தார் என்ன செய்தார். இந்த ஊருக்கு என்ன செய்தார் என்று பேசுகிறார் ஒரு மணி நேரத்தில் நான் தண்ணீர் கொண்டு வந்தேன் என்கிறார், என்ன செய்தார் சசிலா புஷ்பா அவரது சொந்த ஊர் ராதாபுரம் எங்க அம்மா இங்க வேலை பார்த்தார்கள் என்று கதை விடுவது தான் அவரது வேலை, 278 கோடி செலவில் 32 குடிநீர் தொட்டி மூலம் தினசரி குடிநீர் நாம் தான் வழங்கிக் கொண்டிருக்கிறோம். 10 வாா்டுகளில் 24 மணி நேரமும் குடிதண்ணீர் வழங்குகிறோம்  மாநகராட்சி அலுவலகத்திற்கு சசிலா புஷ்பா வருவது கிடையாது, மாதத்துக்கு ஒரு நாள் தான் வருவாா்.  

284 கோடி அவரது பதவிக்காலத்தில் குடிநீர் சப்ளைக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வைத்து இன்று வரை குடிநீர் பைப்லைன் வழங்கப்படவில்லை நாம் தான் அதனை நிறைவேற்றி வருகிறோம் இதுபோல பேசுவது உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் அவரது காலத்தில் மூன்று பூங்கா தான் தூத்துக்குடியில் இருந்தது தற்போது 56 பூங்கா உள்ளது மகளிர்களுக்கு என்று தனி பூங்கா 2 உள்ளது 25 கோடி ரூபாய் மழைக்காலத்தில் செலவு செய்து மோட்டார் அமைத்தது தான் அவர்களுடைய சாதனை. இன்னொரு மோட்டார் வைத்து மாநகர் பகுதியில் தண்ணீரை வெளியேற்ற முயற்சி செய்தார்கள் ஆனால் தண்ணீர் வெளியே செல்லவில்லை 25 வருடம் கழித்து தூத்துக்குடி மாநகரம் எப்படி இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. 

சசிலா புஷ்பா மேயராக இருக்கும் போது மழை காலத்தில் இரண்டு மாதங்கள் பள்ளிக்கூடங்கள் எல்லாம் மூடி இருந்த காலம் உண்டு தற்போது அந்த சூழ்நிலையே கிடையாது அதுபோல அதிமுகவை சேர்ந்த அந்தோணி கிரேஸ் மேயராக இருக்கும் போது கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கு தான் மேயர் அறைக்குள் தனி அறை அமைத்தார்கள் நாலரை ஆண்டு காலத்தில் பக்கிள் ஓடைய ஏன் அகலப்படுத்தவில்லை என்று இன்று கேட்கிறார்கள் தூத்துக்குடி மாநகரை பற்றி உனக்கு என்ன தெரியும்.

தூத்துக்குடி மாநகராட்சியில் 60 பேர் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளார்கள் அதற்கு மாநகராட்சி அனுமதி அளித்தது அந்தோணிகிரேஸ் கடைசி மேயராக இருக்கும்போது பத்து பேர் பணி நியமனத்திற்கு 10 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு பணி ஆணையை வழங்கவில்லை அந்தப் பணத்தை வாங்குவதற்கு பணம் கொடுத்தவர்கள் செருப்பு தேய அலைந்தது தான் மிச்சம் அதன் பின்பு ஆணையராக வந்த ராஜமணி அந்த நபர்களுக்கு பணி ஆணை வழங்கினார். ஒரு ஏக்கர் இடத்தை வளைத்து போடுவதற்காக அந்தோணிகிரேஸ் கடைசி முயற்சி செய்து வருகிறார். ஆனால் அது ஒருபோதும் நடக்காது. அந்தோணி கிரேஸ் பேசுகிறார், மூன்று மாதத்தில் மீண்டும் நாங்கள் அந்த இடத்தை மீட்போம் என்கிறார், நான் உறுதியாக கூறுகிறேன், ஒரு படி மண்ணு கூட உன்னால் எடுக்க முடியாது தூய்மை பணியாளர்கள் பிரச்சனை யார் என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் பேசிக்கொண்டு அலைகிறார்கள்.

தூத்துக்குடி முன்பு எப்படி இருந்தது தற்போது எப்படி இருக்கிறது. என்று தெரிய வரும். அதிரடி அரசியலை நான் ஆரம்பித்தால் உங்களால் தாங்க முடியாது குற்றம் சொல்வதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். எனக்கு வழங்கப்பட்ட பதவியை பொறுப்பாக நினைக்காமல் பொதுமக்கள் எதிா்கால நலன் கருதி பணி செய்து வருகிறேன், பிஜேபியில் அரசு வக்கீலாக இருக்கும் சண்முகசுந்தரம் தெப்பக்குளம் வரலாறு தெரியாமல் 140 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்டது தேவையில்லாமல் பேசி வருகிறார். பழமை மாறாமல் அந்த பணி நடைபெற்று வருகிறது. அவரது ஆதரவாளா் ஓருவா் ஒரு ஏக்கர் இடத்தை அவர் தான் ஆட்டைய போட்டு வைத்துள்ளார். இதுவரை மாநகராட்சி பகுதியில் 50 கோடி மதிப்புள்ள அரசு இடத்தை நாம் மீட்டு உள்ளோம் அதுபோல சென்டர் மீடியாவில் போடப்பட்டிருந்த மின்விளக்கு பற்றி தவறான தகவலை பேசுகிறார் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி ஆவேசமாக பேசினார்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி