விஜய்க்கு மயில் தோகை மாலை .! - வன விலங்குகள் பாதுகாப்பு சட்டம் பாயுமா ?
வேலூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய்க்கு மயில் தோகை மாலை அணிவிக்கப்பட்டது. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972 மயில் தோகைகளை வைத்திருப்பது அனுமதிக்கப்பட்டாலும் அதை பயன்படுத்தி மாலைகள் தயாரிப்பது விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழக அரசியல் வரலாற்றின் புதிய வரவான தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை தீவிரப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் அகரம் சேரியில் தமிழக வெற்றிக்கழகத்தின் மக்கள் சந்திப்பு மற்றும் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஆன விஜய் கலந்து கொண்டு பேசினார்.
இதில் உரையாற்றிய விஜய்க்கு, வீரவாள் பரிசு தொடர்ந்து உரையை முடித்த விஜய்க்கு தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் வீரவாள், வெள்ளி யானை சின்னம், வேல் உள்ளிட்டவற்றை வழங்கினர். குறிப்பாக மயில் தோகை மாலை அணிவித்து விஜய்க்கு வீரவால் பரிசளிக்கப்பட்டது. இதில் தான் விஜய்க்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
விஜய்க்கு மயில் தோகை மாலை அணிவிக்கப்பட்டது சட்டப்படி குற்றம் என்கின்றனர் வனவிலங்கு ஆர்வலர்கள். வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972இன் கீழ் மயில் தோகைகளை வைத்திருப்பது அனுமதிக்கப்படுகிறது. மயில் தோகைகள் அவ்வப்போது உதிர்வது வழக்கம். மேலும் இயற்கையாக மரணமடையும் மயில்களின் தோகைகளை எடுத்து நாம் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றை வணிக ரீதியாக விற்பனை செய்வது மற்றும் அதனை பயன்படுத்தி மாலைகள் போன்ற பொருட்களை தயாரித்து விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். மயில் தோகைகள் மூலம் திருஷ்டி நீக்குவது அல்லது கலாச்சார சமய நோக்கங்களுக்காக இயற்கையாக உதிர்ந்த மயில் தொகைகளை வைத்திருக்கலாம்.
1972 வனவிலங்கு சட்டம் அதிக அளவில் மயில் தோகை மாலைகள் விற்பனை செய்வது சட்ட விரோதமானது. பலர் இயற்கையாக உதிர்ந்த இறகுகள் எனக்கூறி சட்ட விரோதமாக மயில்களை வேட்டையாடி பயன்படுத்தும் அபாயம் இருப்பதால் தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று விஜய்க்கு மயில் தோகை மாலை அணிவிக்கப்பட்டது சட்டப்படி குற்றம் எனவும், வனத்துறை விஜய் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முகாந்திரம் உள்ளது என்கின்றனர் வனவிலங்கு ஆர்வலர்கள்.
