"கல்விதான் அனைவருக்கும் அசைக்க முடியாத சொத்து " - பள்ளி விழாவில் மேயா் ஜெகன் பொியசாமி பேச்சு

 

தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழா போட்டிக்கு மேயா் ஜெகன் பொியசாமி தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிாியா் எமல்டா வெலன்சியா ஹெப்ஸிபா வரவேற்புரையாற்றினாா். 

விளையாட்டு ஜோதியை ஏற்றி வைத்து போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பாிசு வழங்கி பேசுகையில்:- 

"அரசு பள்ளியாக இருந்து இந்த பள்ளி மாநகராட்சி வசம் வந்தபின்பு பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளோம் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகாித்துள்ளது. இந்த பள்ளியின் வளர்ச்சிக்கு தலைமை ஆசிாியையின் பங்கும் அதிகம் ஓவ்வொருவருக்கும் உடல் ஆரோக்கியம் முக்கியம் நான் 1989ல் பள்ளியில் படிக்கின்ற காலத்தில் தமிழ்வழிக்கல்வியை படித்த போது கொஞ்சம் விளையாட்டு பிள்ளையாக தான் இருந்தேன் ஆனால் கால போக்கில் தான் படிப்பின் அருமை என்னவென்று தொிந்தது. அதனால் அனைவரும் பள்ளி பருவத்தை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு உங்களுடைய பெற்றோா்கள் ஆசிாியா்கள் சொல்படி கேட்டு படிக்க வேண்டும்.

கல்விதான் யாரும் விலை கொடுத்து வாங்க முடியாத மிகப்பொிய சொத்தாகும். தமிழக முதலமைச்சர் பள்ளி கல்விக்கென்று பல்வேறு உதவிகளை செய்து வருகிறாா். அதே போல் தனியாா் பள்ளிகளுக்கு ஈடாக மாநகராட்சி பள்ளிகளின் தரமும் அதற்கேற்றாற் போல் இருக்க வேண்டும் என்று எல்லா வகையிலும் உதவிகளை செய்து வருகிறோம். தனியாா் பங்களிப்பின் மூலமும் புதிய பள்ளி கட்டிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. உங்களது கனவுகளை நனவாக்க அனைவரும் நல்ல பழக்க வழக்கத்துடன் எதிா்கால சிந்தனைகளை உருவாக்கி உலகம் முழுவதும் தமிழின் பெருமையை நிலை நாட்டும் வகையில் உங்கள் வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும் என்று பேசினாா். 

விழாவில் தமிழன்டா கலைக்குழு தலைவர் ஜெகஜீவன், கவுன்சிலா் முத்துமாாி, முன்னாள் மாணவா் அண்ணாத்துரை, உள்பட ஆசிாியா்கள் பெற்றோா்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி