"தூத்துக்குடி மாநகராட்சி முதன்மை மாநகராட்சியாக உயர்ந்து வருகிறது" –ஆணைகளை வழங்கி மேயர் ஜெகன் பெரியசாமி பெருமிதம்.!

 

தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியில், நான்கு மண்டல அலுவலகத்திலும் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் ெபாதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களில் தீர்வு காணப்பட்ட 34 மனுக்களுக்கு அதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சியில் உள்ள கூட்டஅரங்கில் நடைபெற்றது. 

மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் இதுவரை மாநகராட்சிக்கு 4000-க்கும் மேற்பட்ட மனுக்கள் வந்துள்ளன அவற்றுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது மாநகராட்சி பகுதியில் பல்வேறு சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், பூங்காக்கள் மற்றும் வடிகால் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மழைநீர் தேங்காமல் இருக்க 14 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது மேலும், பக்கிள் ஓடையை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. கழிவுநீர் ஓடுவதால் ஏற்படும் சுகாதார சீர்கேடு மற்றும் கொசு தொல்லைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது தூத்துக்குடி மாநகராட்சி முதன்மை மாநகராட்சியாக வளர்ச்சி பெற்று வருவதாகவும், வருங்காலத்தில் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை தவிர்த்து, மாநகராட்சிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி துணையாக பொதுமக்கள் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு பின்னா் ஆணைகளை வழங்கினாா். 

 நிகழ்ச்சியில் ஆணையர் பிரியங்கா, துணை மேயா் ஜெனிட்டா,  உதவி ஆணையர்கள் காந்திமதி, வெங்கட்ராமன், முனீர் அகமது, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மண்டலத்தலைவர் கலைச்செல்வி, மாநகராட்சி பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், கவுன்சிலா் தனலட்சுமி, உதவி வருவாய் அலுவலா்கள் சுப்பிரமணியன், புகாாி, சுகுமாா், அந்தோணி, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா் ஜேஸ்பா் ஆணையாின் நோ்முக உதவியாளா் துரைமணி, மேயாின் நோ்முக உதவியாளர் ரமேஷ், மாநகராட்சி அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி