8 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திருப்பூரில் சீமான் பிரசாரம்
இலைக்கு ஓட்டு போட்டீர்கள் மொட்டையாகி போச்சு. சூரியனுக்கு வாக்களித்தீர்கள் அவர்கள் வீட்டில் விடிந்தது. தமிழகம் இருண்டது. விசில் தியேட்டரில் ஊதி கிடந்தார்கள் இப்போது தெருவில் ஊதுகிறார்கள். விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள் என சீமான் திருப்பூரில் பரப்புரை.
திருப்பூர் யூனியன் மில் சாலையில் நாம் தமிழர் கட்சியின் பரப்புரை கூட்டம் மாலை 7.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்த பரப்புரை காரணமாக 2 மணி நேரம் தாமதமாக திருப்பூர் பரப்புரைக் கூட்டத்திற்கு 9.20 மணிக்கு சீமான் வந்தடைந்தார். இதனைத் தொடர்ந்து பேச துவங்கிய சீமான் தன்னுடைய ஆட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் என வீடியோ காட்சிகள் மூலம் விளக்கி உரையாற்றினார். அதில் தொழிற்சாலைகள் மூலமாக தமிழகம் மாசு நிறைந்து உள்ளதாகவும் அதிலிருந்து விவசாயம் சார்ந்த தொழில்கள் உருவாக்கப்பட்டு பொதுமக்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் எனவும் தரமான கல்வி மருத்துவம் குடிநீர் உள்ளிட்டவை கட்டணம் இன்றி வழங்கப்படும் ஆனால் நல்ல சாலைகள், தரமான சேவைகள் இடை நிறுத்தா மின்சாரம் என வழங்கப்படும் அனைத்தும் பணம் தான், எனக்கு ஓட்டு போடவில்லை என்றாலும் பரவாயில்லை மறந்து சூரியன் இரட்டை இலை தாமரையில் போட்டு விடாதீர்கள் படத்துக்கு கூட போய் தூங்கி விடுங்கள். தொழிற்சாலை கழிவுகள் ஆற்றில் கலக்கிறது அதனை அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்கள் ஆமாம் கலக்கிறது என்பதை பார்த்து விட்டோம் என சொல்லிச் சென்று விடுகிறார்கள் இந்த தேர்தலில் இரண்டே போட்டி தான் நமக்கு பிரச்சனை கொடுத்தவர்கள் ஒரு பக்கம் நாம் ஒரு பக்கம் வந்தவன் எல்லாம் இலவசம் என சொல்லி அந்தப் பக்கம் நிற்கிறார்கள் நான் இலவசம் தர மாட்டேன் என் ஆட்சியில் ஓசி பஸ் இல்லை ஏசி பஸ் விடுவேன் அதுவும் கட்டணம் தான். இலவச மின்சாரம் வழங்குவேன் ஆனால் வீட்டை கூட்டி வெளியே சென்றாள் மின்விசிறி விளக்குகளை அனுப்பீர்களா பொறுப்பற்று போகும் என்பதால் தரமான சேவைகள் கட்டணத்தில் தான் தரப்படும். இளைஞர்களுக்கு முழு வேலை வாய்ப்பை வழங்குவேன் வடநாட்டு தொழிலாளர்கள் வரவேண்டிய அவசியம் இல்லாமல் செய்வேன். மதுக்கடையை மூடுவேன் மாவட்டம் தோறும் தொழில் பயிற்சி நிலையங்கள் உருவாக்கி பயிற்சி கொடுப்பேன் உட்கார்ந்து சாப்பிட என் ஆட்சி இல்லை உழைத்து சாப்பிடவே என் ஆட்சி கல் மது இல்லை அதனை மக்கள் குடிக்கலாம் என் ஆட்சியில் கல் இறக்கி அதற்கு பனம்பால் தென்னம்பால் என பெயர் மாற்றி வைப்பேன். தமிழ் படித்தால் தான் அரசு வேலை அரசு பள்ளியில் படிப்பவர்களுக்கு தான் வேலை நான் சொல்வதுதான் புரட்சி புரட்சி என்பது தலைகீழாக மாற்றுவது அனைவரும் சைக்கிளில் தான் செல்ல வேண்டும் நானே சட்டத்தவைக்கு சைக்கிளில் தான் செல்வேன். தலைவர்கள் எல்லாம் இசட் ஒய் பிரிவு பாதுகாப்பு கேட்கிறார்கள் தலைவன் தான் மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் தலைவனுக்கு எதற்கு பாதுகாப்பு நடிகன் ஒருவன் சொல்கிறான் நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் என்று அவனுக்கு நிச்சயம் இல்லாததால் இரண்டு தொகுதியில் நிற்கிறார். இதில் டிஎம்கே டிவிக்கு தான் போட்டி என்று பேசுகிறார்கள் ஆனால் 2000க்கும் 2500க்கு தான் போட்டி. பிராந்திக்கு வீரன் என பெயர் வைக்கிறார்கள் அப்படி என்றால் வீரபாண்டிய கட்டபொம்மன் பாக்சிங் சுபாஷ் சந்திர போஸுக்கு குவாட்டர் என பெயர் வைத்து விடலாமா திராவிட குப்பையை தூக்கிப் போடுங்கள் உதயசூரியனுக்கு வாக்களித்தீர்கள் அவர்கள் வீட்டில் விடிந்து விட்டது தமிழகம் இருண்டு விட்டது இரட்டை இலைக்கு ஓட்டு போட்டீர்கள் அது துளிரும் எனப் பார்த்தோம் மொட்டையாகி போச்சு விசில் தியேட்டரில் ஓதி கிடந்தார்கள் இப்போது தெருவில் ஓதுகிறார்கள் எனவே விவசாய சின்னத்திற்கு வாக்களியுங்கள் என பேசினார்.
தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதி வேட்பாளர்களையும் மேடையில் ஏற்றி அவர்களை அறிமுகம் செய்து விவசாய சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என பரப்புரையில் ஈடுபட்டார்.
சீமான் தாமதமாக வந்த நிலையில் 10 மணி கடந்து பேசி பரப்புரையில் ஈடுபட்ட அவர் இடையே 10 மணியை கடந்ததும் பத்து மணி ஆகிவிட்டது வீடியோவை விரைவு படுத்துங்கள் ஏற்கனவே 262 வழக்குகள் உள்ளது இன்று ஒரு வழக்கு ஆகட்டும் என பேசினார் தொடர்ந்து பரப்பறையில் ஈடுபட்ட அவர் 10:20 மணிக்கு பரப்புரையை நிறைவு செய்தார்.
