போதையில் கார் ஓட்டி விபத்து ‘தூத்துக்குடி சஸ்பெண்ட்’ அதிகாரி கைது.!

 

திருப்பூர்: மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத் திய, 'சஸ்பெண்ட்' ஆன, துாத்துக்குடி மாநகராட்சி அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் அடுத்த மங்கலத்தை சேர்ந்த வர் ஹக்கீம், (52). த.மு.மு.க., முன்னாள் ஒன்றிய செயலர். ஜூன் 10 ம் தேதி இரவு, டூ -வீலரில் ரோட்டை கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த கார் மோதி காயமடைந்தார். காரை ஓட்டி வந்தவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.

மங்கலம் போலீசாரின் விசாரணையில், கார் ஓட்டியவர், கோவை மாவட் டம், சூலுாரை சேர்ந்த சர வணகுமார், 49, என்பதும், துாத்துக்குடி மாநகராட்சி துணை கமிஷனராக பணி யாற்றி, மூன்று மாதங்கள் முன் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

விபத்தை ஏற்படுத்திய சரவணகுமாரை போலீசார் கைது செய் தனர். அவருக்கு உடல் நலம் சரியில்லாததால், நீதிமன்ற உத்தரவில், கோவை அரசு மருத்து வமனையில் போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர், தஞ்சாவூர் மாநகராட்சி கமிஷனராக பணியாற்றிய போது, பயோ மைனிங் குப்பை ஒப்பந்தத்தில், அரசுக்கு, 9.57 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி