வடமாநிலங்களுக்கு காய்கறி ஏற்றிச் செல்லும் தமிழக லாரிகளை குறிவைத்து வாடகை பணம் மோசடி- மோசடி நபரை பிடித்து தருபவருக்கு 20 ஆயிரம் பரிசு அறிவிப்பு.!
தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு காய்கறி லோடுகளை ஏற்றிச் செல்லும் லாரிகளை குறிவைத்து, வாடகைத் தொகையை நூதன முறையில் மோசடி செய்து வரும் மர்ம நபரால் லாரி உரிமை யாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திரா மாநிலங்க ளில் இருந்து ஜெய்ப்பூர், ஆக்ரா, இந்தூர், நாக்பூர், ராஜ்பூர் உள்ளிட்ட வடமா நிலங்களுக்கு காய்கறிகள் லாரிகள் மூலம் அனுப்பப் படுகின்றன. இந்நிலையில், கடந்தாண்டு மே மாதம் முதல் ஒரே மர்ம நபர் தமிழக லாரிகளை குறிவைத்து, கடைக்காரர்களிடம் இருந்து லாரி வாடகைத் தொகையை மோசடியாக பெற்று வருவதாக லாரி உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுவரை ரூ.21 லட்சம் பறிபோனதால் உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
கடந்த மாதம் 25ம்தேதி கிருஷ்ணகிரியில் இருந்து இந்தூருக்கு மாங்காய் ஏற்றிச் சென்ற லாரிக்கு வரவேண்டிய ரூ.96 ஆயிரம், கடந்த 7ம்தேதி ஆந் திர மாநிலம் அனந்தபூ ரில் இருந்து ஆக்ராவுக்கு தக்காளி ஏற்றிச் சென்ற நாமக்கல் லாரிக்கு வர வேண்டிய ரூ.1.67 லட்சம் மற்றும் கடந்த 12ம்தேதி கர்நாடக மாநிலம் கோலாரில் இருந்து ஜெய்ப்பூருக்கு தக்காளி ஏற்றிச் சென்ற நாமக்கல் லாரிக்கு வர வேண்டிய ரூ.1.37 லட்சம் ஆகிய தொகைகளையும் அந்த நபர் மோசடியாக பெற்றுச் சென்றுள்ளார். இதுவரை 21 லாரிகளிடம் இருந்து ரூ.21 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், பல்வேறு மாநில காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டிருந்தும் மர்ம நபர் இன்னும் சிக்க வில்லை என்றும் தெரிவிக் கப்பட்டுள்ளது. இதனால் லாரி உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
மோசடி நடப்பது எப்படி?
இதுகுறித்து கோவில்பட்டியில் இ-வாகன் சேவை மாநிலத் தலைவர் கணேஷ்குமார் நிருபர்களிடம் கூறுகை யில், 'வடமாநில சந்தைகளில் தமிழக லாரிகள் சென்றவுடன், அந்த மர்ம நபர் லாரியை பின்தொடர்ந்து கடைக் குச் சென்று, தன்னை கடை ஊழியர் போல அறிமுகப்படுத்தி கொள்கிறார். பின்னர் சுமை தொழிலாளர்கள் மற் றும் லாரி ஓட்டுநர்களுக்கு உணவு, தேநீர் வாங்கி கொடுத்து நம்பிக்கை ஏற்படுத்துகிறார்.
சரக்குகள் இறக்கி முடிந்ததும், லாரி ஓட்டுநரிடம் இருந்து ரசீதை வாங்கிச் சென்று கடை உரிமை யாளரிடம் கொடுத்து, மீதமுள்ள வாட கைத் தொகையை பெற்றுக் கொள் கிறார். பின்னர் கடை உரிமையாளர் வெளியே சென்றுள்ளார். ஒரு மணி நேரம் கழித்து வந்து பணத்தை பெற் றுக் கொள்ளுங்கள் என்று கூறி அங்கி ருந்து தப்பிச் செல்கிறார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில்
புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவரது புகைப்படத்துடன் கூடிய துண்டுப் பிரசுரங்கள் லாரி ஓட்டுநர் களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்த நபரை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு இ-வாகன் சேவை சார்பில் ரூ.20 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்றார். பேட்டியின்போது இ-வாகன் சேவை மாநிலச் செயலாளர் சாகுல் ஹமீது, நிர்வாகி மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
