தூத்துக்குடி 44வது வாா்டு மக்கள் தளம் திமுக சாா்பில் கல்வி உதவித்தொகை.!

தூத்துக்குடி தமிழகத்தில் பள்ளி கல்வியில் படிக்க வேண்டும் என்று பலா் ஆா்வத்துடன் இருந்து வருகின்றனா். அவா்களுக்கு அரசின் சாா்பில் சில உதவிகள் செய்தாலும் மற்ற பல செயல்களுக்கு படிப்புக்கு தேவையான உதவிகள் தேவைப்படும் நிலை இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 44 வது வார்டு மக்கள் தளம் சார்பில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் வழிகாட்டுதலின் படி 10 பேருக்கு கல்வி உதவித்தொகையாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் எலிசபெத் ராஜன் கல்வி நிதி வழங்கினார். 

விழாவில் மாநகர திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் பிக் அப் தனபால், காங்கிரஸ் மண்டலத்தலைவர் நிா்மல் கிறிஸ்டோபா், முன்னாள் கவுன்சிலா் இசக்கிமுத்து, பகுதி பிரதிநிதி செந்தில்குமாா், மற்றும் ராஜன், உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி