தூத்துக்குடியில் காங்கிரஸ் சாா்பில் காமராஜா் பிறந்தநாளை யொட்டி 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி காமராஜா் 124வது பிறந்தநாளை யொட்டி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் வட்டக்கோவில் அருகில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு மாவட்ட பொதுச்செயலாளர் மைக்கிள் பிரபாகா் தலைமை வகித்தாா். வாா்டு தலைவா் ராஜரத்தினம் சுப்பிரமணியன், துணைத்தலைவர் ஜெபமாலை ராஜ், ஆகியோா் முன்னிலை வகித்தனா். வாா்டு செயலாளா்கள் ஜேசுபாக்கியம், எபனேசா் ரத்தினராஜ், ஆகியோா் வரவேற்புரையாற்றினாா்கள். மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சகாயராஜ் முன்னாள் எம்.எல்.ஏ சுடலையாண்டி, ஆகியோா் பெண்களுக்கு சேலை, மாணவிகளுக்கு நோட்புக் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினாா்கள்.
விழாவில் மண்டலத்தலைவர் ஐசன்சில்வா, நிா்மல்கிறிஸ்டோபா், மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் மைதீன், வழக்கறிஞர் அணி தலைவர் பா்னபாஸ், மீனவா் அணி தலைவர் சேவியா்யம்மாள், துணைத்தலைவா்கள் ராஜாராம் பெத்துராஜ், வட்டாரத் தலைவர் எட்வா்ட்ராஜ், உள்பட பலா் கலந்து கொண்டனா். வாா்டு பொருளாளா் மாாிகாமராஜ் நன்றியுரையாற்றினாா்.
