தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர் போலீசுக்கு போன் செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை.!
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவராக பணியாற்றி வந்த நவநீதபிரபு (38) என்பவர் குடும்ப பிரச்சனை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பிரையன்ட் நகர், மூன்றாம் தெருவில் உள்ள தனது வீட்டில், மயக்கவியல் உதவிப் பேராசிரியரான 39 வயது நவனீத பிரபு, நேற்று இரவு சுமார் 9 மணியளவில் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தற்கொலை செய்வதற்கு முன்பாக தனது வீட்டில் இருந்து தென்பாகம் காவல் நிலையத்துக்கு தொலைபேசி மூலம் தான் தற்கொலை செய்யப் போவதாக தெரிவித்துவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவரது குடும்பத்தினர் அவரை அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அங்குள்ள மருத்துவர்கள் அவர் 'வரும் வழியிலேயே இறந்துவிட்டார்' என தெரிவித்தனர்.
அவரது மனைவி பூர்ணிமாவும் ஒரு மருத்துவர் ஆவார். அவர் தூத்துக்குடியில் உள்ள வஉசி துறைமுகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
(தற்கொலை எண்ணங்களை வெல்வதற்கான உதவியை மாநிலத்தின் சுகாதார உதவி எண் 104, டெலி-மானஸ் 14416, சினேகாவின் தற்கொலை தடுப்பு உதவி எண் 044-24640050 மற்றும் ஸ்பீக்2அஸ் உதவி எண் 9375493754 ஆகியவற்றில் பெறலாம்.)
