விஜய் அறிவிப்பு.!?? - தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?
"If a patient dies in a hospital, the family will pay NOTHING." - CM Vijay's Proposal on Hospital Reforms
தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்தினர் ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளதாகப் சமூக ஊடகங்களில் செய்தி ஒன்று பரவி வைரலாகி வருகிறது.
இதனுள் மறைந்து கிடக்கும் உண்மை என்ன?
பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதையடுத்து தமிழ்நாட்டின் முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களிலும் தேடிப் பார்த்த போது, இது தொடர்பான எந்த செய்தியும் வெளியாகவில்லை.
அதே போல செய்தி ஊடகங்களிலும் இது குறித்தான செய்தி வெளியாகிவுள்ளதா என்று பார்த்த போது, முதல்வர் அறிவித்ததாக இது சம்பந்தமான எந்த செய்தியும் வெளியாகவில்லை.
இதை வைத்து பார்க்கும் போது, பரவி வரும் தகவல் ஆதாரமற்றவை என்பது உறுதியானது.
எனவே, தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்தினர் ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளதாகப் பரவும் செய்தி போலியானது. திட்டமிட்டு இத்தகவலை பரப்புரை செய்து வரும் மர்ம ஆசாமிகள் யார்? மக்களின் மன நிலையை குழப்பம் செய்துவரும் இவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா?
