மார்கண்டேயன் கைது : செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை நாக்கை துருத்தி மிரட்டல் விடுத்த ஏடிஎஸ்பி! - தலைவர்கள் பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம்.!

 

தூத்துக்குடியில் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட எம்.எல்.ஏ., மார்கண்டேயனை படம் எடுக்கச் சென்ற பத்திரிகையாளர்களை மிரட்டும் தொனியில் நாக்கை துருத்தியும், கைகளை ஓங்கியும் வரம்பு மீறி நடந்த ஏ.டி.எஸ்.பி திபு மீது அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த தி.மு.க பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ மார்கண்டேயன், “எலும்பை உடைத்து விடுவேன்” என முதல்வர் விஜய்யை பார்த்து கொலை மிரட்டல் விடும் தொனியில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து த.வெ.கவினர் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் அளித்த புகார் மனுவின் அடிப்படையில் நேற்று காலை விளாத்திகுளம் – அம்பாள்நகரில் உள்ள அவரது இல்லத்தில் அவரை கைது செய்தனர்.

சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மார்கண்டேயனை பார்க்க வந்த முன்னாள் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.எல்.ஏக்கள் அப்துல் வகாப், கருணாநிதி ஆகியோருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இரவு சுமார் 7 மணியளவில் மருத்துவப் பரிசோதனைக்காக மார்கண்டேயன், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். வழக்கமாக அழைத்து வரப்படும் முன் வாசல் வழியாக அல்லாமல் பின் வாசல் வழியாக அழைத்து வரப்பட்டார்.

அப்போது மார்கண்டேயனை படம் பிடிக்கச் சென்ற பத்திரிகையாளர்களை தூத்துக்குடி மாவட்ட ஏ.டி.எஸ்.பி திபு, மிரட்டதுடன் நாக்கை துருத்தியும், கைகளை ஓங்கியும் சில வார்த்தைகளை மிரட்டும் தொனியில் பேசினார். சக காவல் அதிகாரிகள் அவரை தடுக்க முயன்ற போதிலும், கண்டு கொள்ளாமல் தொடர்ந்து வரம்பு மீறி நடந்து கொண்டார். அவரது நடவடிக்கைக்கு பத்திரிகையாளர்கள் அந்த இடத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தனர்.

முந்தைய சட்டமன்றத் தேர்தல் வேட்புமனுத் தாக்கலின்போது, தூத்துக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்தும், இதே போல் திபு, பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டார். ஏ.டி.எஸ்.பி., திபுவின் நடவடிக்கைகள் தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு எதிராக இருப்பதாக தூத்துக்குடி பிரஸ் கிளப் உட்பட பல தலைவர்கள் பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.   

இது குறித்து கண்டணம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்

"முதல்வர் மீது அவதூறு பரப்பியதாகக் கூறி தமிழகக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன் அவர்களிடம் பேட்டி பெற முயன்ற பத்திரிக்கையாளர்களைத் தாக்கியதோடு, நாக்கைத் துருத்திக் கொண்டு அவர்களை “வாடா, போடா” என ஒருமையில் சாடியுள்ள, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. திபு அவர்களின் நாகரிகமற்ற செயல் கண்டனத்திற்குரியது. 

காக்கிச் சட்டைக்கென்று ஒரு தனி மரியாதையும், கண்ணியமும் உண்டு என்பதை மறந்து விட்டு, காவல்துறையின் உயரிய பொறுப்பில் இருக்கும் காவல் அதிகாரியே “பேட்டை ரவுடி” போல இப்படி பொதுவெளியில் சண்டைக்கு நிற்பது ஒட்டுமொத்த காவல்துறையின் பிம்பத்தையும் சிதைத்து விடும். ஏற்கனவே தமிழகத்தில் தொடரும் லாக்-அப் மரணங்களால், காவல்துறையின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கையும், பாதுகாப்புணர்வும் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து வரும் நிலையில், காவல்துறையினர் மிகுந்த கவனத்துடன் தங்களது “Decorum”-மை கடைபிடிக்க வேண்டும். 

மேலும், காவல்துறையைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்கும் முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள், காவல்துறையை வெறும் “ஏவல்துறை”யாக மட்டும் பயன்படுத்தக் கூடாது எனவும், ஜனநாயகத்தின் முக்கியத் தூண்களில் ஒன்றான பத்திரிக்கைத் துறையின் அடிப்படை உரிமைகள் மீது தொடரும் இதுபோன்ற அடக்குமுறைகளை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பத்திரிக்கையாளர்களிடம் எல்லை மீறி தரக்குறைவாக நடந்து கொண்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபு மீது நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி பத்திரிக்கை மற்றும் ஊடக துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவிடம் புகார் மனு அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் முதல்வரை அவதூறாக பேசியது தொடர்பாக கைது செய்யப்பட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு முன்பாக உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காவல்துறை பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.

ஜனநாயகத்தின் முக்கிய தூணாக விளங்கும் பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையினர் படம் பிடிக்க முயற்சி செய்திருந்த கொண்டு இருந்தபோது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபு ஊடகத்தினரை செய்தி மற்றும் படம் பிடிக்க விடாமல் தடுத்தார். 

அதோடு ஊடகத்துறையினரை  தரக்குறைவாக விமர்சித்ததுடன் நாக்கை துருத்தி நாகரிகமற்ற முறையில் அநாகரிகமாக நடந்து கொண்டார்.

பல ஆயிரக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டபோது தொடர்ந்து மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கையை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இதனை வெளிக்கொண்டு வருவது ஊடகத்துறையினரின் கடமையாகும். 

ஊடகத்துறையினரின் இந்த கடமையை செய்யவிடாமல் தடுப்பதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆக்ரோஷமான முறையில் செயல்பட்டதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். கூடுதல் கண்காணிப்பாளர் தீபு தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த மாவட்டத்தில் பணியாற்றி வருவதால் பல்வேறு சம்பவங்களில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினரிடம் இது போன்று அநாகரிகமாக நடந்து கொண்டே வருகிறார். 

எனவே கூடுதல் கண்காணிப்பாளர் தீபு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பணியிடம் மாற்றம் செய்ய பரிந்துரை செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் சார்பில் புகார் மனு அளித்தனர். 

நடந்த சம்பவங்களை செய்தியாளர்களிடம் கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷே குப்தா இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி