"பாசனக் கால்வாய்கள், குளங்கள், மதகுகளை ஆய்வு செய்து வடகிழக்கு பருவமழைக்கு முன் சீரமைக்க வேண்டும் " - கலெக்டாிடம் பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கோரிக்கை.!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாசனக் கால்வாய்கள், வெள்ளநீர் கால்வாய்கள் மற்றும் பாசனக் குளங்களில் பழுதடைந்துள்ள மதகுகளை நேரடியாக ஆய்வு செய்து, வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக தேவையான சீரமைப்பு மற்றும் முன்னேற்பாட்டு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கலெக்டா் விஷுமகாஜனிடம் அளித்துள்ள  கோரிக்கை மனு கூறியிருப்பதாவது 

     தாமிரபரணி ஆற்றின் மூலம் மருதூர் மேலக்கால்வாய், மருதூர் கீழக்கால்வாய் மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட, தென்கால் கால்வாய்கள் வழியாக ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைத்து வருவதாகவும், சாத்தான்குளம், உடன்குடி உள்ளிட்ட வறட்சி பகுதிகளின் குடிநீர் தேவைக்கும் இந்த நீராதாரங்கள் முக்கிய பங்காற்றி வருகிறது      தற்போது தென்மேற்கு பருவமழை போதிய அளவில் இல்லாததால் மாவட்டத்தில் பெரும்பாலான பாசனக் குளங்கள் வறண்டு காணப்படுவதாகவும், கார் பருவ சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது கிணறுகளிலும் நீர்மட்டம் குறைந்துள்ளதால், விவசாயிகள் வரவிருக்கும் வடகிழக்கு பருவமழையை மட்டுமே நம்பியிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது     கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது தாமிரபரணியில் அதிகளவு நீர்வரத்து இருந்த போதிலும், கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாததால் சுமார் 9 டி.எம்.சி. தண்ணீர் கடலுக்கு வீணாக சென்றதாகவும், இதனால் சாகுபடி பரப்பளவு குறைந்ததோடு சடையனேரி கால்வாய்க்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் வறட்சி நிலவியது  எல்-நினோ பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையில் குறுகிய காலத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ள நிலையில், தற்போதே அனைத்து பாசனக் கால்வாய்களையும் தூர்வாரி சீரமைக்கவும், குளங்களில் சேதமடைந்துள்ள மதகுகளை பழுதுபார்க்கவும் மேலும் சாத்தான்குளம், உடன்குடி பகுதிகளில் உள்ள புத்தன்தருவை, வைரவன்தருவை, தாங்கைகுளம், சடையனேரிகுளம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட பெரிய குளங்கள் மற்றும் தாமிரபரணி– கருமேனியாறு– நம்பியாறு இணைப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வெள்ளநீர் கால்வாய்களை கலெக்டா் நேரில் ஆய்வு செய்து, தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், மாவட்டத்தில் விவசாயத்திற்கும் குடிநீர் தேவைக்கும் போதுமான நீர் சேமிப்பு உறுதி செய்யப்பட்டு, வருங்கால வறட்சி பாதிப்புகளைத் தவிர்க்க முடியும் என்று அளித்துள்ள மனுவில் கூறியுள்ளாா்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி