பக்கிள் ஓடையில் கொட்டப்படும் இறைச்சி கடை கழிவுகளால் சுகாதார சீர்கேடு.!- மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

 

தூத்துக்குடி டேவிஸ்புரம் பிரதான சாலையில் அமைந்துள்ள குரூஸ்புரம்  பக்கிள் ஓடை 4ம் பாலத்தில் இறைச்சி கடை கழிவுகளை வாளி வாளியாக தினமும் வந்து கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயமும் அதிகம் உள்ளது என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது எல்லா நாட்களையும் விட ஞாயிற்றுக்கிழமை அதிகமாகி வருகிறது. இதை சுற்றியுள்ள இறைச்சி கடை உரிமையாளர்கள் இதனை தொடர்ந்து செய்து வருகின்றனர் என பொது மக்கள் குற்றம்

சாட்டுகின்றனர்.

மேலும், இதே இடத்தில் வழி போக்கில் பலரும் தங்களது வீட்டு குப்பைகள் மற்றும் கழிவுகளை பிளாஸ்டிக் கேரி பையில் வைத்து பக்கிள் ஓடையில் போட்டு விட்டு செல்வதால் தன்ணீர் சரியாக செல்லாமல் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள், ஈக்கள் அதிகமாகி நோய்களை பரப்பும் ஆபத்தும் உள்ளது. காலையில் தெரு தெருவாக வீடு தவறாமல் மாநகராட்சி குப்பை வண்டி வீட்டு வாசல் முன் வருகிறது. அங்கு இந்த குப்பைகளை மற்றும் கழிவுகளை போடாமல் பக்கிள் ஓடையில் போடுவது தவறு என்பதை சுட்டிக்காட்ட மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். நடவடிக்கை எடுக்க முன்வருமா? மாநகராட்சி நிர்வாகம்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி