தூத்துக்குடி இசக்கியம்மன் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு அன்னதானம்.
தூத்துக்குடி முத்தையாபுரம் உப்பாத்து ஓடை இசக்கியம்மன் கோவில் கொடைவிழா நடைபெற்றது விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்று தீா்த்தகரை சென்று புனித நீர் எடுத்து வரப்பட்டது. இதனை தொடா்ந்து சாமக்கொடை நடைபெற்று பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கொடைவிழாவை முன்னிட்டு 2000 பேர் பங்கேற்ற அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தை முத்தையாபுரம் தொழிலதிபா் டிரான்ஸ்போா்ட் உாிமையாளா் பாலமுருகன் தொடங்கி வைத்தாா்.
விழாவில் கோவில் தா்மகா்த்தா பிரபாகரன், பொருளாளா் அய்யம்பெருமாள், நிா்வாகிகள் கனிராஜ், ஆறுமுகம், அன்னராஜ், பொன்ராஜ், இசக்கிராஜா, முருகன் உள்பட கோவில் கமிட்டியினா் ஊா் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
