தூத்துக்குடி அதிமுக நிர்வாகிகள் த.வெ.க-வில் ஐக்கியம்!

தூத்துக்குடி முன்னாள் அதிமுக நகர மன்றத் தலைவர் மனோஜ் குமார் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுகவிலிருந்து விலகிய நிர்வாகிகள் தங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இணைப்பு விழாவில் அமைச்சர் மற்றும் த.வெ.க மாநிலப் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன், தூத்துக்குடி மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த த.வெ.க முன்னணி நிர்வாகிகள் முன்னிலை வகித்து, புதிய உறுப்பினர்களைச் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

இந்நிகழ்வில், அதிமுக முக்கிய நிர்வாகிகளான கு. கென்னடி, பி. சார்லஸ், பி. லியோ உள்ளிட்ட பல முக்கியப் பொறுப்பாளர்களும், 24 மற்றும் 25-வது வார்டுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்களும் த.வெ.க-வில் இணைந்தனர். தூத்துக்குடி மாநகரப் பகுதியில் அதிமுகவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் மாற்றுக்கட்சியில் இணைந்த சம்பவம் உள்ளூர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக மோகம், மாற்று கட்சியினர் ஆசைக்கு கை கொடுக்குமா?

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய போது இதன் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் இடையூறாக இருந்தவர்களின் கணவு, தவெகவின் வெற்றிக்கு பிறகு தகர்த்தெறிய பட்டுள்ளது. சீட்டெடுக்கும் ஜெயிக்க முடியாது என்று சொல்லி வந்த பலருக்கும் தவெகவின் வெற்றி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தவெக மீது கொண்ட அரசியல் மோகம் பலரை இதில் ஐக்கியம் ஆக தூண்டியது. இந்த தூண்டுதலின் படி பெருந்தலைகள் முதல் சின்னஞ்சிறு பொறுப்பாளர்கள் வரை பல்வேறு கட்சியில் இருந்து தவெக பக்கம் படையெடுத்தனர்‌. அதன்படி தூத்துக்குடியில் அதிமுக திமுகவில் இருந்து சென்றவர்களை நாம் அறிவோம். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் உள்ளாட்சி தேர்தலை குறிவைத்து பதவி மோகத்தில் கட்சி தாவுவதாகவே பார்க்கப்படுகிறது, பொதுமக்கள் மத்தியில் பேசவும் படுகிறது. இதுபோக மற்றும் சிலர் தவெகவில் முக்கிய கட்சி பொறுப்பை குறிவைத்து காட்சி தாவுவதாகவும் குற்றச்சாடடு எழுகிறது. மாற்று கட்சியினரின்  வருகையால் தவெகவில் ஆளுமையும் கை மாறுவதாக சொல்லப்படுகிறது.‌ விஜய் ரசிகர் மன்றம் மற்றும்

மக்கள் இயக்க நிர்வாகிகள் இவர்களால் தவெகவில் புறக்கணிக்க படுவதாகவே பேசப்படுகிறது. இதனால் தவெகவின இலட்சியம், கொள்கை, வளர்ச்சி, மக்கள் பணி என எல்லாமே குழி தோண்டி புதைக்கப்படுவதாக விஜய் ரசிகர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி