தூத்துக்குடி : பொருட்காட்சி நடக்க உள்ள பகுதியில் மாமூல் கேட்டு மிரட்டிய தவெக நிர்வாகிகள்!
தூத்துக்குடி, பனிமய மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு பொருட்காட்சி நடக்க உள்ள பகுதியில் மாமூல் கேட்டு மிரட்டி பொருட்களை அடித்து நொறுக்கிய தவெக பகுதிச் செயலாளர் திவாகர் உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல்.
'பொருட்காட்சிகள் மூலம் கிடைக்கும் பணத்தில் எங்களுக்கும் பங்கு வேண்டும்' என மிரட்டிய தவெக பிரமுகர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
“என்னை கேட்டுதான் எல்லாம் செய்யணும்னு சொல்றான்.. தேர்தலில் வேலை பார்த்தா ரவுடித்தனம் பண்ணுவானா?” என நிர்வாகிகள் ஆவேசம்
தூத்துக்குடி பணிமயமாதா பேராலய திருவிழாவை ஒட்டி சவேரியானா மைதானத்தில் ஏற்பாடு செய்துள்ள பொருட்காட்சிக்குள் புகுந்து தவெக பகுதி செயலாளர் திவாகர், ஆண்டோ, சாமிங் உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல் பொருட்களைச் சூறையாடியதாக போலீசில் புகார் அளித்துள்ள நிலையில் போலீசார் விசாரனை.

